reporter312

2385 POSTS 0 COMMENTS

விவசாயப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

(ரக்ஸனா)பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம். கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி புதன்கிழமை(27.12.2023) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவ்அலுவலகத்திற்கு முன்னால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய மு.பரமேஸ்வரன் மீண்டும் மட்டக்களப்பில் கடமை ஏற்பதை எதிர்க்கிறோம். என்ற தலைப்பிட்ட பதாதையை தாங்கியவாறு விவசாயிகள் கவனஈர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது தற்போது கடமையிலுள்ள பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கவனஈர்ப்பின் இறுதியில் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வழங்குவதற்கான கடிதம் ஒன்றைiயும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கையளித்தனர். ஏற்கனவே கடமையாற்றி வரும் பிரதி விவசாயப் பணிப்பாளர் மேற்கொண்ட திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும், அதனால் தங்களது விவசாயங்கள் பாதிப்படையும், எனவும், புதிதாக நியமனம் வழங்கப்பட்டவர் முன்னர் கடமையாற்றி பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவானால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.  

கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள்  கரை ஒதுங்கியுள்ளது.

(ரக்ஸனா)  மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறுகடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரைஒதுங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறுகடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று  வியாழக்கிழமை(28.12.2023) காலை கரை ஒதுங்கியுள்ளது. அப்பகுதி கடலில் புதன்கிழமை மாலை மர்மப் பொருள்ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள்அவதானித்துள்ளனர். இந்நிலையில் அப்பொருள்வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியுள்ளதாகமீனவர்கள் தெரிவிக்கின்றர். இந்நிலையில் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள பொருள்என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள்தொடற்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால்தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாகஅமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள்அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனைகளுவாஞ்சிகுடி பொலிசாரும் பார்வையிட்டுச்சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள்தெரிவிக்கின்றனர். இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல்போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின்மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்றஎழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்தபொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்றுபொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும்பொருத்தப்பட்டுள்ளது.

மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலைக்கதம்பம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலை மன்றங்களும் இணைந்து நடத்திய கலைக்கதம்பம் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (19) திகதி மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. மண்முனை...

நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின்  சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா.

(பாறுக் ஷிஹான்) நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின்   சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா  சவளக்கடை றோயல் காடன் பகுதியிலுள்ள  மர்ஹூம் ஏ.எல்.எம் பளீல் நினைவரங்கில்   நடைபெற்றது. இதன் போது 2023 ஆண்டு தரம் 5  புலமைப் பரீட்சையில் ...

சிறப்பாக பணியாற்றிய  இரு ஆசிரியர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா.

( காரைதீவு  சகா)  சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் சிறப்பாக பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களான ரி.காண்டீபன் மற்றும் எஸ்.ரதிதேவன் ஆகியோருக்கான சேவை நலன் பாராட்டு விழா  பாடசாலை...

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை சந்தேக நபர் கைது(photoes)

(பாறுக் ஷிஹான்) ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற  சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 9 ஆந் திகதி...

காரைதீவில் தேசிக சிவாக்கிர சுவாமிகள்.

( வி.ரி.சகாதேவராஜா)  இந்தியாவில் இருந்து வருகை தந்த அருட்குருநாதர் தவத்திரு  சிவாக்கிர தேசிக சுவாமிகள் காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திற்கு  நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். அவரது வருகையை  முன்னிட்டு அப்பிரதேச ஆலய நிர்வாகம்...

“மஹர சிறைச்சாலை பள்ளியை மீளத்திறக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பள்ளிவாசல் வளாகத்துக்கு விஜயம் செய்த மக்கள்...

மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீளத்திறக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எவ்வித காரணங்களும் இல்லாமல் தொடர்ந்தும் இதனை மூடிவைத்திருப்பது உகந்ததல்ல எனவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

சுயாட்சியை நோக்கி 75 ஆவது ஆண்டில் தீர்க்கமான முடிவு வேண்டும்! பிறந்தநாள் கேக்கை வெட்டி  சுமந்திரன் உரை!

( வி.ரி.சகாதேவராஜா)   இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த காரைதீவு மண்ணில் இடம் பெறுவது பெருமைப்பட...

கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலை ஆங்கில தின நிகழ்வுகள்.

(எம்.ஏ.ஏ.அக்தார்) கல்முனை வலய கல்வி அலுவலகத்தின்  அனுசரணையில் (Gem Project) மூலம் நடத்தப்பட்ட English Festival நிகழ்வு கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் நடைபெற்றது பாடசாலை அதிபர்  எம்.எஸ்.எம். பைசால்  தலைமையில் இடம்பெற்ற...

கல்முனை வலய பாடசாலைகளுக்கு ஜோசப் ஸ்டாலின் விஜயம்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  கல்முனை கல்வி வலய ஆசிரியர் சங்க செயலாளரின் கோரிக்கையை ஏற்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள்  கல்முனை வலய பாடசாலைகளுக்கான தரிசிப்பை மேற்கொண்டு அதிபர்...

பட்டிருப்பு தேசிய பாடசாலையில் ஆங்கில மொழி திருவிழா 

(அஸ்ஹர் இப்றாஹிம்)   பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் ஆங்கில மொழி திருவிழா பாடசாலை கலையரங்கில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ரீ.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய...

சாணக்கியனின் முயற்சியினால் PTA கைதிகள் நால்வருக்கு பிணை.(Video)

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் உட்பட 4 பேருக்கு நாளைய தினம் பிணை வழங்க ஏற்பாடு மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன்...

கண்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் மற்றும் இளம் பெண்களை பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர்கள் கைது.

(அஸ்ஹர் இப்றாஹிம்)  15 வயதுடைய பாடசாலை மாணவியும், அவரது தாயாரும் கண்டி பொலிஸ் நிலையத்தில் சிறுவர்  மற்றும் பெண்கள் பணியகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இரு பாடசாலை மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கண்டி பொலிஸாரினால்...

ஓட்டமாவடியில் பிரதேச இலக்கிய விழா.

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசாரப் பிரிவு ஏற்பாடு செய்த பிரதேச இலக்கிய விழா திங்கட்கிழமை (18) ஓட்டமாவடி பழைய பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஓட்டமாவடி உதவிப் பிரதேச...

கடத்தி வரப்பட்ட  தடை செய்யப்பட்ட மாத்திரைகளுடன் இரு சந்தேக இளைஞர்கள் கைது.

(வாஸ் கூஞ்ஞ) கடத்தல் மூலம் தடைசெய்யப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிலாவத்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தெரியவருவதாவது கடந்த வெள்ளிக்கிழமை (15) மன்னார் வடமேற்கு கடற்படை கட்டளை...

 நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரு விழா.

(பாறுக் ஷிஹான்)  நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்த முப்பெரு விழா  நற்பிட்டிமுனை  அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது 2023 ஆண்டு...

பொதுமக்கள் பயமின்றி போதை பொருள்   தொடர்பான தகவல்களை வழங்குங்கள்-சாய்ந்தமருது பகுதியில் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம.

(பாறுக் ஷிஹான்) விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளன. அப்பணிப்பின் கீழ் விசேட...

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் புளியந்தீவு ரிதம் சனசமூக நிலையத்திற்கு விஜயம்.

(சுமன்)  மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என். சிவலிங்கம் அவர்கள் புளியந்தீவு ரிதம் சனசமூக நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் மேற்படி சனசமூக நிலையத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் வட்டார வாசிப்பு நிலையத்தினை சனசமூக நிலையத்தின்...

திருவாசக மாநாடு 03 ஆம் நாள் இறுதி நிகழ்வு.

(நூருல் ஹுதா உமர்) திருவாசக மாநாட்டின் 03 ஆம் நாள் நிகழ்வுகள் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலையரங்கில் (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30  மணியளவில்  இறைபணிச் செம்மல் கண....