பிரதானசெய்திகள்

சவளக்கடை 5 ஆம் கொலனியில் 20 பவுண் நகைகளை களவாடிய நபர்கள் கைது.

(பாறுக் ஷிஹான்,எருவில் துசி) பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3   சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம்...

ஒரு வார காலமாக மூடிக் கிடக்கும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை.

( வி.ரி. சகாதேவராஜா)   கடந்த ஒரு வார காலமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்ப்பினால் மூடி கிடக்கின்றது.  இதனால் அந்த பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் தமிழ்மக்கள் வைத்திய சேவையின்றி பாதிக்கப்பட்டுள்ளார்கள்...

தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்- த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து  வேண்டுகோள்.

(கனகராசா சரவணன்) சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டம் அதனடிப்படையில் தமிழர்களின் பிரச்சனையை ஒரு கால் பந்தாட்டம் போல அங்கும் இங்கும் உதைத்து வருகின்றனர்...

பா.உ ஜனாவின் முயற்சியால் திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறை தீர்த்துவைப்பு.

(சுமன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின் முயற்சியின் பயனாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகளுக்காக...

சம்பிரதாய போக்குகளால் உலகை வெற்றி கொள்ள முடியாது.

 எல்லையற்ற அதிகார பேராசை கொண்ட பல்வேறு தரப்பினர் பெரும் செல்வத்தை செலவழித்து அதிகாரத்தை பெற முயற்சிக்கும் நேரத்தில் இலங்கையின் 76 வருட ஜனநாயக வரலாற்றில் அதிகாரம் இன்றி நாட்டிற்கு சேவையாற்றிய ஒரேயொரு எதிர்க்கட்சி...

வாழ்வு சுமந்த வலி நூல் வெளியீட்டு விழா.

(அபு அலா)  அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரவை. மு.தயாளனின் "வாழ்வு சுமந்த வலி" நூல் வெளியீட்டு விழா (17) திருகோணமலை நகராட்சி மன்ற...

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை, இலக்கிய நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச் )  திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும்  பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த  ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு கலை,...

அம்பாறை மாவட்டத்தில்  வெள்ளரிப்பழ   விற்பனை  அமோகம்.

(பாறுக் ஷிஹான்)  அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை...

அறநெறிப் பாடசாலைகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம்!

( வி.ரி.சகாதேவராஜா)  இலங்கையில் உள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  புதிய பாடத் திட்டமொன்றை அறிமுகம் செய்திருக்கிறது. அதன் ஓரங்கமாக திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அறநெறிப் பாடசாலை...

” மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா.

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப்...

வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சிகைனகளுக்குத் தீர்வு காணும் செயல்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின்  நிருவாக  அலுவலர்...

வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீ

வி.சுகிர்தகுமார்   அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்றிரவு (15) வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும்...

மட்டு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் விடுதலைப் புலிகளால்  நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (15)  விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு பிரிவினருக்கு...

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. இரா.சாணக்கியன்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. நாம் என்றும் எம் மக்களுக்காக, உட்கட்சி மோதல்கள் எமது மக்களுக்கான குறிக்கோள்கள் கொள்கைகளை சிதைப்பதில்லை. நாம் இன்னும் வலுப்பெற்றுள்ளோம். ஓர்...

பேசாலை சென் பத்திமா ம.ம.வித்தியாலய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி.

(வாஸ் கூஞ்ஞ) மன்.பேசாலை சென் பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இப்பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது. வியாழக்கிழமை (14) நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட...

வாழை நார் ஊடாக  உற்பத்திப்பொருட்களை மேற்கொள்ளும் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் சி.பி.எம் நிறுவன  நிதி அனுசரணையில்   மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் பெண்களுடன்  இணைந்து  பிளாஸ்டிக் மாற்றிட்டுப் பொருள்கள் உற்பத்திற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த...

இந்துக்கல்லூரி மாணவர்களுக்கான தங்குமிட விடுதி மீளமைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் எல்லை புர கிராம மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற் கொண்டு  இந்துக் கல்லூரியில்  நிர்வகிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான தங்குமிட  விடுதி  கடந்த...

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் மகளிர் தின விழா.

அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்ற தொணிப் பொருளில் 2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் டி ஜே அதிசயராஜ் தலைமையில்...

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது.

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994...

  இரட்டைக் கொலை நடந்தது என்ன?

(பாறுக் ஷிஹான்) தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொண்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொலைக் காட்சிகளிலும் வானொலிகளிலும்    முதன்மை செய்திகளாக வலம் வந்து...