ஊர்ச் செய்திகள்

நாககட்டு ஆனி உத்தரம் 5ஆம் திகதி பின்னிரவு

பண்டாரியாவெளி நாககட்டு ஆனி உத்தரம் எதிர்வரும் 5/7/2022 பின்னிரவு 5 மணிக்கு இடம்பெறவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 1/7/2022 அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி...

படுவான் சமர், பருவகாலம் – 12 பனையறுப்பான் வசமானது கிண்ணம்.

கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திய படுவான் சமர் (பருவகாலம் - 12) பனையறுப்பான் வசமானது. படுவான்கரை பிரதேச பண்பாட்டை தழுவிய தொனிப்பொருளில் வருடாந்தம் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்திவரும் உதைபந்தாட்டம் இவ்வாண்டு கடந்த ஆனி...

முனைக்காடு உதைபந்தாட்ட திருவிழா கிண்ணம் மட்டு றோயல் அணி வசமானது.

முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட திருவிழா கிண்ணம் மட்டு றோயல் வசமானது. இராமகிருஷ்ணா விளையாட்டு கழக மைதானத்தில் ஆனி 18,19ம் திகதிகளில் கழகத்தின் 53 ஆவது ஆண்டு நிறைவு, கிராமத்தின் வளர்ச்சியில் தம்மை அர்ப்பணித்து...

கொக்கட்டிச்சோலை மக்களுக்கு பத்மநபா பவுண்டேசன் நிதியுதவி

பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான மக்களுக்கு பத்மநபா பவுண்டேசன் நிதியுதவியினை இன்று (19) வழங்கி வைத்தனர். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது வாழ்வாதாரங்களையும், குடும்ப வருமானங்களையும் இழந்துள்ள கொக்கட்டிச்சோலை, கொக்கட்டிச்சோலை தெற்கு...

சஹ்ரான் பயன்படுத்திய வாகனத்தை பயன்படுத்தவில்லை; நாடாளுமன்றில் சரத் வீரசேகர

சஹ்ரான் ஹாசீம் பயன்படுத்திய வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை என முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாக்குதலை நடத்திய பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் Toyota Land Cruiser...

வெளிநாட்டு முதலீட்டாளர்களை தாமதமாக திருப்பி அனுப்ப அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது 

(ஹஸ்பர்) சில அதிகாரிகளின் ஒத்திவைப்பினால் நாடு வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடுகிறது இதனை அனுமதிக்க வேண்டாம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தகைய வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களை உருவாக்கும் மாதங்கள்...

நாடு மரண விளிம்பில்;  அரசாங்கம் பதவி விலக வேண்டும்.

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டார்.இரு வருடங்களுக்கு முன்னர் இருந்து குட்டையில் மீன் பிடித்தது யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் வீதிகள் மறிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால், ​போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள் மறிக்கப்பட்டுள்ள இடங்களின் விபரம்: காக்காபள்ளிய, கட்டுநாயக்க, ரம்புக்கனை, காலி, கேகாலை, ஹிங்குராங்கொட, பத்தேகம,...

கோதுமை மாவின் விலை அதிரடியாக அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு

இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்துக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 35 சதவீதத்தினால் கட்டணங்களை அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் பிள்ளையான்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்.கிராமிய வீதிகள் அபிவிருத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.  

15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று.. ஜோன்ஸ்டன், ரோஹித போன்றோருக்கும் அமைச்சுப்பதவி

15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கவுள்ளதாக...

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் “ஸுஹுருலியா” ஈ தொழில் நுட்ப வேலைத்திட்டம்.

( அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர் அமைச்சு இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் மற்றும் ஒகில்வி நிறுவனம் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்கான "சுஹுருலியா" ஈ தொழில்நுட்ப...

அலரிமாளிகையை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில்

அலரிமாளிகையை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அலரிமாளிகைக்கு செல்லும் பகுதியானது இப்பொழுது வீதி தடைகள் போடப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெரும் திரளான மக்கள் விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்து...

கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் பகுதியில் காட்டு யானை தாக்கி வீடுகள் சேதம்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் உள்ள காளிகாபுரம் வீட்டுத்திட்ட பகுதிக்குள் காட்டு யானை புகுந்து வீடுகள், பயிர்களை சேதமாக்கிய சம்பவம் நேற்று(08) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதிக்குள் நேற்று இரவு உள்நுழைந்த காட்டு...

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

(சுமன்) மட்டக்களப்பு ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் (முருகன்) ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ நூதன பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக மகாயாக பெரும் சாந்தி விழா எதிர்வரும் 06.02.2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இலங்கைத் திருநாட்டிலே...

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

(திருமலை தட்சாயினி ஞானசங்கரன்) திருகோணமலை காப்போம் அமைப்பினரால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்திற்குட்பட்ட அன்புவழிபுரம் , வரோதய நகர் கிராமங்களைச் சேர்ந்த நெருக்கடியான பொருளாதார சூழலிலும் திறமையாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்யும்...

வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 112வது பாடசாலை தின நிகழ்வு

(குகதர்சன்) கல்குடா கல்வி வயதுக்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் 112வது பாடசாலை தின நிகழ்வு நேற்று வித்தியாலயத்தில் விபுலானந்தா ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது அதிபர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பாரம்பரிய தைப் பொங்கல் விழா கலாச்சார

(க.ருத்திரன்) 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற தொணிப் பொருளில்  புதன்கிழமை(19) கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் தமிழர் பாரம்பரிய தைப் பொங்கல் விழா இன்று கலாச்சார நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற்றது. உதவி...

காரைதீவு நந்தவனப்பிள்ளையார் ஆலய சங்காபிஷேகம்

காரைதீவு ஸ்ரீ நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த சங்காபிசேகம் நேற்று சங்காபிசேககுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில், ஆலயகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் நடைபெற்றபோது.. (படங்கள் : காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)