மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலைக்கதம்பம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலை மன்றங்களும் இணைந்து நடத்திய கலைக்கதம்பம் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (19) திகதி மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் திருமதி.ல.பிரஷாந்தன்,  மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.இதன்போது நடனம், பாடல்கள், கவிதை, பறங்கியர் நடனம் மற்றும் முஸ்லீம் மாணவர்களின் பாடல்கள்  போன்ற நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.