திருவாசக மாநாடு 03 ஆம் நாள் இறுதி நிகழ்வு.

(நூருல் ஹுதா உமர்) திருவாசக மாநாட்டின் 03 ஆம் நாள் நிகழ்வுகள் தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கண்ணகி கலையரங்கில் (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 08.30  மணியளவில்  இறைபணிச் செம்மல் கண. இராசரெத்தினம் தலைமையில் ஆரம்பமாகி சுவாமிகளை வரவேற்றல் மங்கள விளக்கேற்றல், நந்திக்கோடி ஏற்றல், காவிக்கோடி ஏற்றல் தேவாரம்  இசைத்தல் என்பனவற்றுடன் ஆரம்பமாகியது
இன் நிகழ்வில்  சிறப்பு  அருளுரை வழங்குவதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்த தவத்திரு சிவாக்கர தேசிய சுவாமிகள், கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் தலைவர்  ஸ்ரீமத் அட்சராத் மானந்தா ஜீ, மட்டக்களப்பு  இராம கிருஷ்ண மிஷன் தலைவர்  ஸ்ரீமத் சுவாமி நிலமாதவானந்தா ஜீ,  ஆன்மிக அதிதியாக சிவஸ்ரீ. நீ. அங்குசநாத குக்கள்,மேலும்  திரு. அரவிந்திரன் ஜீ, (கிழக்கு மாகாண இந்து ஸ்வயம்சேவக சங்க தலைவர் ), அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம்சேவக சங்க பொறுப்பாளர் திரு. இரா. குணசிங்கம், அக்கறைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர் இறை பணிச் செம்மல் த. கைலாயபிள்ளை, திருக்கோவில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் தேவராஜ் நிசாந்தி, இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் அம்பாரை மாவட்ட  இணைப்பாளர்கள், ஆலயங்களின் தலைவர் அதன் உறுப்பினர்களும், பொது அமைப்புங்களும், சிவதொண்டர் அமைப்பின் உறுப்பினர்கள், அம்பாரை மாவட்ட  பிரதேச ஒதுவார்களும், பொதுமக்கள், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து மாநாட்டின் திருவாசக நூல் வெளியீடு மற்றும் மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் திருவாசக மாநாடு இனிதே நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.