( வி.ரி.சகாதேவராஜா) இந்தியாவில் இருந்து வருகை தந்த அருட்குருநாதர் தவத்திரு சிவாக்கிர தேசிக சுவாமிகள் காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வருகை தந்தார்.
அவரது வருகையை முன்னிட்டு அப்பிரதேச ஆலய நிர்வாகம் பிரதேச மக்களும் இன்முகத்துடன் அவரை வரவேற்று கௌரவித்தனர்.
அதனைத்தொடர்ந்து சுவாமியின் அருளுரை இடம்பெற்றது.
அனைவருக்கும் திருவாசகம் நூல் விநியோகிக்கப்பட்டது.