கவிதை

உழைப்பாளி வாழ்க

உழைப்பாளி வாழ்க உயிர் கொடுத்த அன்னைக்கு, உலகை இரசிக்க வைப்பதற்கு, உணவு கொடுக்கும், உழைப்பாளி வாழ்க! இறைவனின் உணர்வு இல்லை எனில், இங்கு நாம் இல்லை. இவர்களின் உழைப்பு இல்லை எனில், இங்கு எம் உடல் இல்லை. உடலுக்கு உரம் கொடுக்கும் உழைப்பாளி வாழ்க! இயங்கியலின் உன்னத படைப்பு அவர்கள். இயங்கிக்கொண்டிருப்பதில்...

சேமிக்கப் பழகு

சேமிப்பை மறந்த மானிடரானோம் - மழை நீர் சேமிப்பை கூட மறந்தே தேவையற்றதை சேமித்து சேமித்தே பலதையும் வங்கியில் இட்டோம் தானியங்களின் சேமிப்பை தெரிந்தும் தொலைத்தோம் மானியங்களின் சிரிப்பை மகிழ்ந்து ஏற்றோம் - இன்றோ சூனியங்களை அறுவடை செய்தே வாழ்கின்றோம் பணமிருந்தால் பலதையும் வாங்கிட துடித்தோம் - முழு மனத்தோடே உள்ளூர் உற்பத்தியை விற்றோம் - இப்போ பணமிருந்தும் உண்ணா உணவின்றி தவிக்கிறோமே! தற்சார்பு பொருண்மியமதை தாரை வார்த்தோம் எச்சார்புமில்லா வெளிநாட்டு பொருண்மியத்தால் கெட்டோம் இன்றோ! தற்காப்புக்கு கூட உணவில்லாம் பரிதவிக்கிறோமே நம் முன்னோர்கள் தானியத்தை கோபுர கலசத்தில் காக்க நாமோ! விதையில்லா தானியத்தில் நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க இப்போ! முழுதையும் இழந்தே கையேந்தி நிற்கிறோமே! பணம் மட்டுமே சேமிப்பு இல்லையே! தானிய வகைகளின் சேகரிப்பு தானே முதன்மையானதே! அதை மறந்ததால் தானே இன்று தடுமாறித் தவிக்கிறோமே! உலகமயமாக்கம் நம்மைத் தனித்தனியே துரத்தியது கொரோனா வைரசோ தனிமைப்படுத்தி உணரவைத்தது உழவை மீண்டும் கையிலெடுத்தே அந்த சேமிப்பையும் கற்றிடுவோமே...! பண்டமாற்று முறையில் மனிதன் பூரணமாய் வாழ்ந்தான் பணமாற்று முறையில் தானே அவன் தோற்றுப் போனான் மனமாற்றமதை நேசித்து நேசித்தே மனிதநேயத்தை புதைத்தே வாழ்கிறானே..! சேமிப்பை உந்தன் அடுக்குப் பானையில் இருந்தே தொடங்கு அடுக்குப் பானைகள் நிறைந்திருந்தால் ஏழைகளின் வாழ்வும் மனமும் செழிக்கும் வாழ்வின் துயரங்கள் யாவும் உடைந்தே போகும் சேகரிக்கப் பழகு மரபணு மாற்றமில்லாத நல்ல விதைளை சுவாசிக்கப் பழகு கந்தகமற்ற தூய காற்றின் விசும்பலை வாசிக்கப் பழகை மனிதம் காக்கும் புத்தறிவு நூல்களை நேசிக்க பழகுவோம் இயற்கையின் கொடைகளை பகிர்ந்துண்டு வாழ்தலை முன்னெடுக்க இனி முயல்வோம் பிறர் பசிப்பிணியோடு இருத்தலை பிடுங்கி எறிவோம் சேமித்தவற்றை பிறருக்கு உவந்தளித்தே தர்மத்தை சேமிப்போம் ஞாரே

அன்றும் இன்றும் மனதை உலுக்கிய உண்மை……

அன்றும் இன்றும் மனதை உலுக்கிய உண்மை…… பனிமலைதோட்டம் பச்சைபடர்ந்ததேயிலை ரயில் பெட்டிபோல் தொடர் வீடுகள் பயணிகள் ஏறியும் புறப்படாத லயன்கள்காட்சியளிக்க அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… மேல் மலையில் கால் சறுக்கி தவறிவீழ்ந்தும் இறந்தனர் இயற்கைஅனர்த்தபிடியில் மண்மூடியும் மடிந்தனர் அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… ஓய்வுகிடைக்காஉழைப்பில் காலம் தோறும் உழைத்தும் உழைப்புக்குஏற்றவேதனம் கையில் எட்டாது நீங்காதவறுமையில் வரண்டும் போனவாழ்க்கை அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… தோட்டதொழிலாளிஉழைப்பு சுரண்டும் பித்தலாட்டக் கூட்டத்திற்கே? தொடர்கதையாய் தொடர்கின்றது அன்றும் இன்றும் மனதைஉலுக்கியஉண்மை…… மரணிக்கப்படாசட்டங்கள் மனசாட்சி...

அறிந்து சொல்வீர் குழந்தைகாள்

அறிந்து சொல்வீர் குழந்தைகாள் இலுப்பை மரத்தின் கதையிது அறிய நல்ல கதையிது எளிய தமிழின் மொழியிலே இளைய எனது நண்பர்கள் பாடியாடி மகிழுங்கள் பாட்டின் பொருளும் அறியுங்கள் இலுப்பை நிழலின் குளிர்மையில் இருந்து மகிழ்ந்த நினைவுகள் இருக்கிதெந்தன் மனதிலே இன்னும் நல்ல பசுமையாய் குரும்பைத் தேரில் அழகுகூட்ட ஈர்க்கில் கோர்க்கும்...

புத்தகங்கள்

  அறிவை திறக்கும் வித்தகம் அதை அடக்கியது புத்தகம் புத்தக பூச்சியாகாதீர்கள் நீங்களே ஒரு புத்தகமாகுங்கள். வாசிக்க கிடைத்த வரம் அது வாசிப்பில்லா மனிதருக்கு பூரணம் ஏது? சேமிக்க வேண்டிய செல்வமும் தேட வேண்டிய பொருளும் புத்தகமல்லவோ? காகிதத்தில் ஞானம் வருகிறது என்றால் நம்புவீரோ? புத்தக காகிதங்களில் வருகிறது வாசித்துப்பாருங்கள் நம்புவீர். கல்வி என்பது கொடுக்கப்படும் தானம் கல்வியை...

புவி தினம்

புவிக்கு ஒரு தினம்… அது புவிக்கு மட்டும் தானோ? புவி சுமக்கும் நமக்கெல்லாம் இல்லையோ? ஆசிரியர் தினம், சிறுவர் தினம், மகளீர் தினம் என்பவையின் முக்கியம் உணர்ந்தவர்களும் இறந்த தினங்களுக்கு இரத்த முகாம் கொடுப்பவர்களும் இறந்து கொண்டே எம் உயிர் காக்கும் இப் புவிக்கோர் தினம் வரும் போது மறந்து விடுகிறார்களே! தினங்கள்...

பிரிவினை வேண்டாம்

  உயிர்த்த ஞாயிறு நினைவு கூறப்போவது பல உயிர்கள் உதிர்ந்த ஞாயிறு என்றுதான். குரோத நெஞ்சங்கள் மருந்தாக வேண்டிக்கொண்டது சிலுவைச் சகோதரங்களை மட்டுமல்ல சில அப்பாவிகளையும் தான். நம்மில் பலர் மதமெனும் அடையாளம் கொண்டுதான் நினைவு கூர்கின்றோம். உயிர் நீத்த உறவுகளுக்காய் மனிதம் கொண்டும் இரு நிமிடம் ஒதுக்க வேண்டும் மனிதரெல்லாம் அதுவே குரோதமில்ல நெஞ்சினர்க்கு அழகு. ஒரு...

நிழல் தரும் மரங்கள்

நிழல் தரும் மரங்கள் ஓரிரு நட்சத்திரங்கள் பற்றிக் கொள்ள பாசமுடன் கைகள் - எம் பயணங்கள் தொடர்ந்தன…   மீண்டும் ஓர் இருண்ட பொழுது 04. 2019.   இருள், பயம் சுமை…   உள்ளங்கள் இறுக பாதைகள் சுருங்கின.   தடுமாறிய பொழுதில்,   கைப்பற்றல்கள் மீண்டும் தொடர்ந்தன. எம் விரல்களிடை வல்லமை உள்;ள நட்சத்திரங்கள் முளைத்தன.   சுற்றிய பூமிப்...

உருண்டை உலகத்தை தட்டையாக்கும் அவர்கள்.

உலகம் உருண்டை அல்ல தட்டையானது தான். அதிகார சபையில், கலிலியோ பின்வாங்கிய தருணம். உருண்டையான உலகம் மீளவும் தட்டையாயிற்று. கேலிகள் கிண்டல்கள் எள்ளல்கள் ஏளனங்கள் கெக்கலிப்புகள் கொக்கரப்புகள் அதிர்ந்து வானில் எகிறிய எக்காளம். காலாதி காலமும் அதிகாரத் தலைமுறை முகங்களில் சளிக்கட்டிய எச்சில்களாக, வீழ்ந்தப்படியே. எனினும், இன்னமும் சபைகள் அவர்களிடந்தான். உருண்டை உலகை தட்டையாக்கும் அவர்களிடந்தான். சி.ஜெயசங்கர்.

கொரோனா

கொரோனா கொள்ளை நோய் அது கொரோனா. கொடிய நோய் அது கொரோனா. கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கும், கொடுமை நோய் அது கொரோனா. கொஞ்சம் கூட இரக்கமின்றி, இருப்பார் இல்லார் நிலையறியா, கொன்று குவிக்கும் இன்றைய நோய் அது கொரோனா. அனர்த்தம் பல கண்ட உலகம், அடங்கிக்கிடக்க...

எமதும் எம்முலகத்ததும் கதை.

எமது தலைமுறை வரம்பெற்று வந்துள்ளதா? சாபங்களுடன் கூடவே பிறந்துள்ளதா? பூமாலைகளும், முட்கிரீடங்களும் வாய்க்கப்பெற்ற வாழ்க்கை நமக்குரியதாயிற்று. உயிர்த்தும், மரித்தும் மரித்தும், உயிர்த்தும், சொல்லக்கூடியதும் முடியாததுமான ஆயிரமாயிரம் கதைகளுடன், வாய்க்கப்பெற்ற வாழ்க்கை நமக்குரியதாயிற்று. உலகம் எங்களுக்கு மூடியிருந்ததொரு காலம். எங்களை உலகத்துக்கு மூடிக்கொண்டதொரு காலம். வாழ்வு ஒருபகுதிக்கு மறுக்கப்பட்டதொரு காலத்தில், வேறொரு...

வேம்பு வேண்டும்

வேம்பு வேண்டும் வேக்காடு போக்கிட வேக்காளம் அகன்றிட வேகம் நீங்கிட வேசறவு இல்லாமலாயிட வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும் வீட்டில் ஒரு வேம்பு வேண்டும் நிழல் கொடுத்திட நிதம் கிருமி அழித்திட நீண்ட ஆயுள் பெற்றிட நிலைக்கும் பயன்பெற்றிட வேம்பு வேண்டும் வேம்பு வேண்டும் வீட்டில் ஒரு வேம்பு வேண்டும் பட்டையிலும்...

பட்டறிவு உணர்த்திய பாடம்

பட்டறிவு உணர்த்திய பாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர் உலகமெல்லாம் மிகத்தீவிரமாய் கண்ணுக்கு புலப்பட்டது பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் காலனியமனோபாவம் ஏற்கமறுக்கின்றது கண்ணுக்குதெரியாஎதிரி கொரோனாபுகுத்தியது பட்டறிவுஉணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் அடக்கியாளும் நவகாலனித்துவம் கையேந்தும் நுகர்வுபண்பாடு மீண்டும் உள்@ர் உற்பத்தியில் பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் உள்@ர் விவசாயம் உள்@ர் வைத்தியம் உள்@ர் உற்பத்தி இன்னும் பல கைத்தவறவைத்த காலனித்துவ  சிந்தனை பட்டறிவு உணர்த்தியபாடம் உள்@ர் அறிவுமீளுருவாக்கம் உலகமயமாக்கம் நுகர்வுப்பண்பாடு பல்தேசிய கம்பெனிகள் எல்லாம்...

“அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா” வெறும் தம்பட்டமே…..

“அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா” வெறும் தம்பட்டமே….. வெறும் தம்பட்டமே எத்தனைஆர்பாட்டங்கள் எத்தனைபோராட்டங்கள் அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. தேயிலை, இறப்பர் விலைக்கேற்ற கொடுப்பனவுகள் கூட்டிதரும் அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. சம்பளஉயர்வுக்கு வெடிக்காத புஸ்வானம் போல் அசையாதபேச்சுவார்த்தை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. இந்தமாதம் முதல் அடுத்தமாதத்தில் இருந்து அதற்குஅடுத்தமாதம் தொடங்க…… அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே….. நவகாலனித்துவ தந்திரோபாயம் கம்பனிகள் இன்றுவரை பேச்சுவார்த்தை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. உலகெல்லாம் கொரோனாவால்முடக்கம் இனிஏற்றுமதி இலாபமில்லை அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும் தம்பட்டமே…. இன்றுமுடிவுவரும் நாளைநல்லதீர்வு கிட்டுமோ……? அடிப்படைசம்பளம் ஆயிரம் ரூபா வெறும்...

எம்முள் இருக்குமவர் இவ்வுலகுடையார்…

எம்முள் இருக்குமவர் இவ்வுலகுடையார்… கடவுளர் உளரேல், தாயினும் மேலான தயையுடையாரவர். பேய் பூதமெனப் பீதியூட்டும் தகைடையார் அல்லர் அவர்…. உள்ளதான இந்த உலகம் உய்ய உயிர் வாழும், மனிதருள்ளம் குடிக்கொள்ளும் வல்லாரவர்…. புத்தியிலுறைந்து பல்லுயிரோம்பும் பக்குவந்தரும் பண்புடையாளரவர். தொடவும், தொடாதிருக்கவும் உள்ளிருக்கவும், வெளியகற்றவும் தீட்டுப் பார்க்கும் குணமுடையார் அல்லார் அவர்… எவரும், எதுவும், அவர்முன்னம் சமம்,...

நட்சத்திரங்களை விற்று நடக்கும் வியாபாரம்….

நட்சத்திரங்களை விற்று நடக்கும் வியாபாரம்…. வின்மீன்களும், தாரகைகளும் அளந்தறிய இயலாத, பெரும் பரப்பில் இயங்கியும் இயக்கியும் பால்வெளியின் உலகம். வின்மீன்கள் அசைவற்றுப் போகும். தாரகைகள் ஒளியிழந்து போகும். நிச்சயமற்றதொரு எதிர்காலம், உக்கிரம் பெற்றிருக்கும் ஊழிப்போலானதொரு காலத்தில்… நம்பிக்கையின் திறவுகோல்களான அறிவுமுறைகள், ஏற்றத்தாழ்வுகளுடன் ஆயினும் மனித உயிரிருப்பிற்கும், வாழ்விற்கும் முனைவு கொள்ளும் அறிவியல் இயக்கம். நமக்குரியதாகி இருக்குமொரு அரிதான,...

இன்னும் எத்தனை காலம்…..?

வழியேது….. எத்தனை சிகரம் ஏறியும் மலைவாழ் பெண்களின் வாழ்க்கை சிகரம் தொட இன்னும் எத்தனை காலம்…..? மனதில் குடும்ப சுமைகள் உடலில் வலிமையின்றி வாட்டும் வெயிலில் வாட்டத்துடன் கொழுந்து பறிக்கும் கொப்பளித்த கைகள்; இன்னும் எத்தனை காலம்…….? பெண்களின் கால்களில் மிஞ்சி போல உறவாடும் நித்தம் இரத்தம் குடிக்கும் அட்டைகள் ஆசை மிஞ்சிக்கு இன்னும் எத்தனை காலம்……? கொப்பளித்த...

விடுமுறையில் நாங்கள்

விடுமுறையில் நாங்கள் விக்கிரமாதித்தன், தோளில் சுமந்த வேதாளம் போல் ஆகிவிட்டதே பல்கலைக்கழகம் எனும் எங்கள் பயணம். பட்டதாரி என்ற விடுகதைக்குதான் இன்னும் விடை கிடைக்கவில்லை. பாட நூல் பயின்ற நாட்களையும் விடுமுறையில் தூக்கம் பயின்ற நாட்களையும் ஏறெடுத்துப் பார்த்தால் வித்தியாசம் ஒன்றுமில்லை. சகுனியின் கையில் மாட்டிக் கொண்ட பாண்டவரின் பகடைகள் போல...

போற்றுதும் போற்றுதும்.

போற்றுதும் போற்றுதும், இயற்கையைப் போற்றுதும் இயற்கையைப் போற்றுதும் இயற்கையில் இணைந்த உயிர்களைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் இயற்கையை மதிக்கும் மனிதரைப் போற்றுதும் உயிர்களை மதிக்கும் மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும் மனிதரை மனிதராய் மதிக்கும் மனிதரை மனிதரைப் போற்றுதும் மனிதரைப் போற்றுதும். சி.ஜெயசங்கர்   யார்?; யார்?; ஓடி விளையாடி ஆடுகளுடன் ஓடி மேய்க்கும் மெய்யழகை...

ஓடைப்போலாயினும், கோடையிலும்; கொஞ்சம்…

கருமேகங்காள்! கருமேகங்காள்! திரண்டு இருண்டு வந்து, வெள்ளம் கரை புரண்டு, ஓடவைக்கும் வல்லபங்காள் மனமிரங்கி, கோடையிலும் கொஞ்சம் ஓடைப்போலாயினும், ஓடிப்போனால் என்னப்பா? கருமேகங்காள்! கருமேகங்காள்! தென்னங் குருத்தும், மஞ்சள் முருக்கும், மல்லிகையும், மாவிலங்கும், மாதுளையும், மலர்க்கன்றுகளும், மா, பலா, வாழைகளும் வாடி வதங்குவதில் என்னத்தான் சுகங்கண்டாய்? மனமிரங்கி, கோடையிலும் கொஞ்சம் ஓடை போலாயினும் ஓடிப் போனால் என்னப்பா...