reporter312

2301 POSTS 0 COMMENTS

பலஸ்தீன் துாதுவர் ஆலயத்தில் கிறிஸ்மஸ் நிகழ்வுகள்.

(அஷ்ரப் ஏ சமத்)  கொழும்பில் உள்ள பலஸ்தீன் துாதுவர் ஆலயத்தில் இவ் வருடமும் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் பலஸ்தீன் துாதுவர் கலாநிதி செய்யட் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அருட் தந்தை...

பிரான்ஸில் திருவள்ளுவர் திருவுருவச்சிலையை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.

வொரெயால் தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை...

மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு ஆரம்பம்.

(கனகராசா சரவணன்)  மட்டக்களப்பில் பொலிசார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பபடிவம் ஒன்றை வீடு வீடாக வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வீடு வீடாக பொலிசார்...

மாற்றுதிறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உட்புகுத்தல் தொடர்பான முன்னேற்ற கூட்டம்.           

(ஹஸ்பர்)   மாற்றுதிறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உட்புகுத்தல் தொடர்பான முன்னேற்ற கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (12) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. ESPD முகாமையாளர்...

வெலிகந்த கந்தகாடு முகாமில் இருந்து தப்பி ஓடிய 130 பேரும் கைது.

 (கனகராசா சரவணன்) வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கபட்டுவரும்; கைதிகள்  நேற்று திங்கட்கிழமை (11) இருதடவைகள் பாதுகாப்பு வேலியை உடைத்து தப்பி ஓடிய 130 கைதிகளை கைது செய்துள்ளதாக வெலிகந்த பெலிசார்...

தபால் ஊழியர்களின் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு.

(செ.திவாகரன்) நுவரெலியாவில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள பொதுமக்களும் , சுற்றுலா பயணிகளும். தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நுவரெலியா தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொதுமக்களும் , சுற்றுலா பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நாடளாவிய ரீதியில்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 34.3 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில்  அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 34.3 மில்லி மீற்றர் மழை உறுகாமம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான வாகனேரியில் 11.3...

சம்மாந்துறையில் கொட்டும் மழை தூறலில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)  கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் சஹிலா இஸ்ஸதீன் அவர்களின் பணிப்புரைக்கு அமைய  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எஸ்.ஐ.எம் கபீரின் வழி காட்டலின் கீழ்...

மருதமுனையில் கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை கிறிஸ்டல் விளையாட்டு கழகம் அதன் 30வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்த கழகத்தின் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் "கிறிஸ்டல் அடைவாளர்களுக்கு கௌரவம் - 2023" நிகழ்வு கழகத்தின்...

மட்டக்களப்பின் இராணுவ முகங்களை அகற்ற கோரிக்கை.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களின் நாடாளுமன்ற உரையில் இருந்து.... இன்றைய தினம் நடந்த பாராளுமன்ற அமர்வின் போதான கேள்வி பதிலின் போது 12.12.2023. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே குருக்கள்மட...

கற்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு விநியோகம்.

(க.ருத்திரன்.)   கற்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு உணவு விநியோகத் திட்டம் கிரான் கோறளை தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று (11) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவின் ஆலோசனையின் பேரில் 2023...

வெருகல் பிரதேச மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு.

(ஹஸ்பர்)   திருகோணமலை_ வெருகல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில்   World Vision நிறுவனத்தின் அனுசரணையில்  இலங்கைத்துறை முகத்துவாரம் கிராமசேவகர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தலா இரண்டு லட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் (11)...

தொழில் முயற்சியாண்மை செயலமர்வில்  பங்குபற்றிய இளைஞர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

(நூருல் ஹுதா உமர்) சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட தொழில் தேடுகின்ற இளைஞர், யுவதிகள் தொழில் முயற்சியாண்மை செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்  வழங்கும் நிகழ்வு கிழக்கு நட்புறவு ஒன்றிய மற்றும் Softa Care நிறுவனத்தின்...

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு.

(பாறுக் ஷிஹான்) டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் நிகழ்வு ஒன்றினை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை...

சாய்ந்தமருதில் மு.கா. கிளைகள் புனரமைப்பு.

(ஏ.எஸ்.மெளலானா) சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை 23ஆம் வட்டாரத்திற்கான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகளை புனரமைப்பு செய்வதற்கான விசேட கூட்டம் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் அதிஉயர் பீட...

பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் – மட்டக்களப்பில் மூன்று நாள் செயலமர்வு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) அனர்த்த பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் "இனவிருத்தி சுகாதாரம்" எனும் தலைப்பில் மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மூன்று நாள் செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு கிறீன் காடின்...

யாழில் போதை பொருள் கடத்தல்காரரன 6 பேர் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து  கொலை அச்சுறுத்தல்.

(கனகராசா சரவணன்) யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில்; இனம் தெரியாத போதை பொருள் கடத்தல்காரரன  6 பேர் கொண்ட பெண்கள் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டினுள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ள...

ஆனைகட்டியவெளியில் செத்தல் மிளகாய் அறுவடை விழா.

( வி.ரி. சகாதேவராஜா) விவசாய திணைக்களத்தினால் முன்மாதிரி துண்டச் செய்கைக்காக வழங்கப்பட்ட கலப்பின செத்தல் மிளகாய் செய்கையின் அறுவடை விழா றாணமடு விவசாய போதனாசிரியர் பிரிவுகளுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி கிராமத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. றாணமடு விவசாய...

மாணவிகளின் மத நல்லிணக்க களப்பயணம்.

( காரைதீவு சகா) நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் கல்லூரி மாணவிகள் வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு இனமத நல்லிணக்க களப்பயணம் ஒன்றை கடந்த சனிக்கிழமையன்று மேற்கொண்டிருந்தார்கள் . கல்லூரி...

கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சஹீலா இஸ்ஸதீன் கடமையேற்பு.

(ஏ.எஸ்.மெளலானா) கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட டாக்டர் சஹீலா இஸ்ஸதீன் இன்று திங்கட்கிழமை (11) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் துறைசார் வைத்திய அதிகாரிகள் மற்றும்...