மாணவிகளின் மத நல்லிணக்க களப்பயணம்.

( காரைதீவு சகா)
நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் கல்லூரி மாணவிகள் வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு இனமத நல்லிணக்க களப்பயணம் ஒன்றை கடந்த சனிக்கிழமையன்று மேற்கொண்டிருந்தார்கள் .
கல்லூரி அதிபர் ஏ.எல்.நிஷாமுடீன்  தலைமையிலே மாணவிகள் ஆலயத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு  இஸ்லாமிய மாணவிகள் ஆலய நடைமுறைகளையும் இந்து வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொண்டார்கள்.
 ஆலய பரிபாலன சபை தலைவர் கே.ஜெயசிறிலின்  வேண்டுகோளுக்கு அமைவாக ஆலய பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆலயம் தொடர்பான வரலாற்றை அந்த மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
 கூடவே இனமத நல்லிணக்கம் பற்றியும்  எடுத்துரைக்கப்பட்டது.
 அந்த மாணவிகள் முதன்முறையாக ஒரு இந்து ஆலயத்திற்கு வருகை தந்தமையை சுட்டி காட்டினார்கள். மற்றும் அதிபர்ஆசிரியர்களும்நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
 இந்த பயணம் தமக்கு திருப்தி அளித்ததாகவும் அவர்கள் கூறினார்கள்.

IMG-20231210-WA0032.jpgIMG-20231210-WA0034.jpgIMG-20231210-WA0033.jpgIMG-20231210-WA0031.jpgSAVE_20231211_061800.jpgSAVE_20231211_061752.jpg