சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு வழிகாட்டல் கருத்தரங்கு.

(பாறுக் ஷிஹான்)
டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமை தினத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் நிகழ்வு ஒன்றினை எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 9 மணி முதல் 12 மணி வரை ஏற்பாடு செய்துள்ளது.
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இந்நிகழ்வு கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன் இதில் பல்வேறு திணைக்கள உயரதிகாரிகள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிவில் அமைப்புக்கள் என்பன கலந்து கொள்ளவுள்ளனர்.
 
இந்நிகழ்வில் மனித உரிமைகள் பற்றிய விடயங்களையும் ,ஆணைக்குழுவின் பொது வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான விழிப்பூட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
 
இது தவிர மனித உரிமை பாதுகாவலர் வழிகாட்டுதல் ,விசேட தேவை உடையவர் (மாற்று திறனாளிகள்) தொடர்பான சுற்றுநிருபம், உள நல நிறுவனத்தின் உண்மையை கண்டறிதல் ,தடுப்பு காவலில் இறத்தல், சட்டவிரோத கொலைகள், சம்பந்தமாக கலந்துரையாடல் என்பனவும் விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

AZEES.JPG