தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள்

நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

வன்முறை சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழப்பு

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 218 பேர்...

இராணுவப் பாதுகாப்புடன் அலரிமாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை நேற்று முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். சுமார்...

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டது

அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஜோதிடர் ‘ஞானக்கா’வின் வீடும் தாக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலையில் சுவரை உடைத்து வீட்டினுள் நுழைந்து தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கல்வீச்சுத் தாக்குதலில், வீட்டின்...

கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார். கண்ணீர்ப்புகைத் தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது