இராணுவப் பாதுகாப்புடன் அலரிமாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார்.

அலரிமாளிகையை நேற்று முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

சுமார் 3 தடவைகள் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்திய பொலிஸார் இறுதியாக வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை பலத்த இராணுவ பாதுகாப்போடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையை விட்டு வெளியேறினார்.

இதேவேளை அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.