மானிப்பாயில் இளைஞன் மீது படையினர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில்...

மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்: அலி சப்ரி

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முனைவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைனுக்கு...

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

பொருளாதாரம் தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகள் அண்மையில் எடுத்த தீர்மானங்கள் குறித்து அமைச்சரவையும் நாடாளுமன்றமும் கேள்வி எழுப்ப வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு...

கொழும்பு துறைமுகத்தில் உலகின் அதிசொகுசு உல்லாச கப்பல்!

உலகின் அதி சொகுசு வாய்ந்த ‘மெயின் ஷிப் 5’ (Mein Schiff 5) கப்பல் 2000க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலில், 2,030 சுற்றுலாப் பயணிகளும்...

மனிதக் கடத்தல் வழக்கு – இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் கைது!

ஓமானின் இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாவது செயலாளர் ஈ.குஷான் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.57 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட அவர்...

அலி சப்ரி அமெரிக்காவுக்கு பயணம்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தோனி பிளின்கனின் அழைப்பின் பேரில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அமெரிக்கா சென்றுள்ளார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர். இந்த விஜயத்தின்போது,...

திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்புவிழா.

(த.சுபேசன்) தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தையிட்டி கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் மேல்மாடிக் கட்டடத் திறப்பு விழா வைபவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சிபாரிசில்...

வன்னி ஹோப் மற்றும் ரட்ணம் பவுன்டேஷன் நிறுவனங்களினால் வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் ஆரம்பித்து...

(ஹஸ்பர்) திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் சிந்தனையில் உருவான வலய தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவைக்கான மையம் நேற்று (29) வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிரீதரன் தலைமையில் திருகோணமலை வலயக் கல்வி அலுவலக...

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி

(ஏ.எல்.எம். ஷினாஸ்) இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திகாமடுல்ல முயற்சியாண்மை வர்த்தக மற்றும் விற்பனை கண்காட்சி...

மந்த போசாக்கும் கற்றல் உபகரணங்கள் விலையேற்றமும் சிறுவர்களை துஸ்பிரயோகத்துக்கு வழி சமைத்துள்ளது – வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்...

(வாஸ் கூஞ்ஞ) மந்த போசாக்கும் கற்றல் உபகரணங்களின் விலை ஏற்றங்களும் பாடசாலைக் கல்வியை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர் காலத்தில் அதிகரிக்கச் செய்வதுடன் சிறுவர் துஸ்பிரையோகங்கள் அதிகரிப்பதற்கும் வழி திறப்பதாக அமையும் என...

சுபீட்சம் EPaper 29.11.2022

சுபீட்சம் இன்றைய பத்திரிக்கை 29.11.2022 supeedsam_Tuesday_29_11_2022

சரியான ஒழுங்குபடுத்தல் இன்றி கசினோ உரிமங்கள் வழங்கப்படக்கூடாது – ஹர்ஷ

இலங்கைக்குள் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டுமானால், உடனடியாக சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்...

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – விமல் வீரவன்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று ‘உத்தர லங்கா சபாகயவின் தலைவரும், நாடாளுமன்ற...

மாவீரர்நாள்: பெருமளவில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தாமை நல்லிணக்க சமிக்ஞை – செல்வம்

மாவீரர்நாள் நினைவு கூரலுக்கு பெருமளவில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தவில்லை என்றும் அதனை வரவேற்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் நல்லிணக்க சமிக்ஞை என்றும்...

இரட்டைக் குடியுரிமை விவகாரம் : டயானா குறித்து விசாரணை !

இரட்டைக் குடியுரிமைக்கு எதிரான இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று...

தமிழர்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க கூடாது என்கின்றார் சரத் வீரசேகர

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த போவதில்லை...

யாழ்.இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தாக்கிய...

அராலியில் கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு மீனவர்கள் எதிர்ப்பு!

அராலி பகுதி கடலில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு அங்கிருக்கும் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் நாங்கள் கடற்றொழிலினையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கையை நடாத்தி வருகின்றோம். பொருளாதார நெருக்கடியால்...

பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும்...

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் உயிர்நீர்த்த மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து, 6.07 மணியளவில்...

தியாக தீபம் திலீபன் நினைவு தூபி முன் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி!

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபி முன் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  

வடக்கு ஆளுநர் இந்தியாவிற்கு விஜயம்!

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காகவே அவர் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார். மதுரையில் நடக்கும் குறித்த மாநாடு இரு...

மாவீரர்நாள் நினைவேந்தலை உணர்ச்சிபூர்வமாக அனுஷ்டிக்க ஒத்துழைக்குமாறு யாழ் முதல்வர் வேண்டுகோள்!

உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடத்தப்படவுள்ள நிலையில் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தவகையில் அனைத்து பொதுமக்களும் தங்கள் இல்லங்களுக்கு...

கொடிகளையும் பதாகைகளையும் கிழித்தெறிந்த பொலிஸார் சுடுவோம் எனவும் அச்சுறுத்தல்!

மாவீரர் நாளுக்காக தமிழர்கள் ஏற்றியிருந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளையும் பதாகைகளையும் பொலிஸார் கிழித்தெறிந்துள்ளனர். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்ல வாசல் அலங்காரங்களை அறுத்தெறிந்துள்ளதோடு கைதுப்பாக்கியையும் எடுத்து சுடுவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். முல்லைத்தீவு நகர...

தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர்களுக்கு நினைவேந்தல் !

தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் விடுதலைக்கான பயணத்தில் உயர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு இன்று வணக்கம் செலுத்தப்படவுள்ளது இன்று மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பலுடன் தொடங்கி, ஒரு நிமிட மௌனவணக்கத்தை அடுத்து,...

மாவீரர்நாள்: முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடல்

தமிழர் பிரதேசங்களில் பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் உயிரிழந்த தமது உற்றார், உறவினர், நண்பர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகளையும் தாண்டி முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள்...

இவ்வருட இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய

உள்ளூராட்சி தேர்தலை எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் காலம் தாழ்த்த முடியாது என்றும் இவ்வருட இறுதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடும் என்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய...

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம் மீள்திருத்தம் செய்யப்படும் – காஞ்சன விஜேசேகர

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) தினசரி மின்வெட்டுகள் தொடர்பான தகவல்களை...

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது ? – டலஸ் கேள்வி

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது நடத்தப்படும் என குறிப்பிடப்பட முடியாத நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இவ்வாறான நிலையில் உள்ளுராட்சித் தேர்தலும் பிற்போடப்பட்டால் தமிழ்களின்...

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் மீது திடீரென கரிசனை காட்டுவதற்கு காரணம் என்ன என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் வடக்கிற்கான மூன்று நாட்கள்...