விஷேட செய்திகள்

ஒலுவில் -அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து :

தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார் நூருள் ஹுதா உமர். இன்று காலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்திற்கு அண்மையில் நடந்த விபத்தில்  மருதமுனையைச் சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக  விரிவுரையாளரும் பிரபல...

பாசிக்குடா பிரதேசத்தில் லையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் கைதுஃ

வலையமைப்பு ஊடாக பண மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை சனிக்கிழமை இரவு கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார். வறக்காபொல கொரகொல்ல பிரதேசத்தினை...

தொழில் பெற்றுத்தருவதாக போலியான படிவங்களுடன் கல்முனையில் மோசடி கும்பல் : மக்களை அவதானமாக இருக்க கோருகிறார் றிசாத் ஷரிஃப்.

நூருல் ஹுதா உமர் ஏற்கெனவே கல்முனை பிரதேசத்திற்காக தேசிய காங்கிரஸினால் ஒதுக்கப்பட்ட வேலை வாய்ப்புப்படிவங்கள் யாவும் தகுதியானவர்களை தெரிவுசெய்து பூர்த்தி செய்யப்பட்டு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டன. இப்போது போலியாக தயாரிக்கப்பட்ட  படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்...

கல்முனையில் நடைபெற்ற அஷ்ரப் நினைவு நிகழ்வு

(அஸ்லம் எஸ்.மௌலானா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு...

மட்டக்களப்பில் மாணவர்களிடம் போதை பொருள் பரிமாற்றம் அதிகரிப்பு

பெற்றோர் பிள்ளைகள் மீது கவனம் செலுத்துமாறு சமூக பொலிஸ் குழுவின் பொலிஸ் பொறுப்பதிகாரி எம். சுதர்சன் வேண்டுகோள்   கனகராசா சரவணன் -- மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவில் போதைப்பொருள் மாணவர்களிடம் பரிமாறப்டுகின்றது எனவே பெற்றோர்...

மருதமுனையின் முதலாவது பெண் கலாநிதி ஆனார் முஹம்மட் மஜீத் மஷ்ரூபா

நூருல் ஹுதா உமர் மருதமுனையைச் சேர்ந்த முஹம்மட் மஜீத் மஷ்ரூபா மலேசியா முகாமைத்துவ விஞ்ஞான பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் கற்கை தொடர்பான ஆய்வினை நிறைவு செய்து கலாநிதி பட்டத்தினை பெற்றுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞான...

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு.

(எச்.எம்.எம்.பர்ஸான்) மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இன்று (14) திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இடம்பெற்ற இச் செயலமர்வில் ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிப்பது தொடர்பாகவும் அவர்கள்...

வனவள நாசகாரச் செயல்கள் பற்றி அறிவிக்க தனியான தொலைபேசி இலக்கம்

(எஸ்.நாகராஜா) சட்டவிரோதமான முறையில் காட்டுக்குத் தீ வைத்தல், காடழிப்புச் செய்தல், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற செயற்பாடுகளினால் பெறுமதிமிக்க இயற்கை வளங்கள் நாளுக்கு நாள் அழிவை எதிர்நோக்கி வருவதனைத் தடுப்பதற்கான பல்வேறுபட்ட முயற்சிகளையும் வனஜீவராசிகள்...

சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு  மாகாண மட்டத் தரிசிப்பு.

(காரைதீவு நிருபர் சகா) வலயக் கல்வி அலுவலகத்தினை மேம்படுத்துதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் கிழக்கிலுள்ள 17 வலயக் கல்வி அலுவலகங்களுக்கான தரிசிப்பானது மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம்...

ஜீவன் தொண்டமான் அட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

(க.கிஷாந்தன்) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அட்டன் நகர் பகுதிக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார். அத்துடன், நகரப்பகுதியில் நிலவும் குறைப்பாடுகளையும் மக்கள், நகரசபை அதிகாரிகள் ஊடாக கேட்டறிந்துகொண்டார். அவற்றுக்கான தீர்வுகளை...

சித்தர்கள் வேலோடும் மலையை சென்றடைந்தார்கள்: நாளை எண்ணைய்க்காப்பு நிகழ்வு

சிவ பூமியாம் இலங்காபுரி  மட்டக்களப்பு சித்தாண்டி  சித்தர்களின் ஆதி இருப்பிடமான வேலோடும் மலையில் சித்தர்கள் பிரதிஷ்டை   மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழாவுக்காக சித்தர்கள் சிலைகள் தாங்கிய பவனி வேலோடு மலையை நேற்று முற்பகல்...

கல்முனை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம்-செ.கஜேந்திரன் எம்.பி பார்வை

பாறுக் ஷிஹான்   கல்முனை பிரதேசத்தில்  காட்டு  யானைகளின் அட்டகாசம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி வன சீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தேசிய பட்டியல் உறுப்பினரான செல்வராஜா...

வெளிநாட்டுப்பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகிய பிறேமலால் ஜெயசேகர

படுவான்பாலகன் நாடாளுமன்ற உறுப்பினராக பிறேமலால் ஜெயசேகர பதவியேற்பது இன்று வெளிநாட்டு ஊடகங்களில் ஒரு தலைப்பு நிகழ்வாகிவிட்டது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், இந்தியாவில் இந்து, பிரிட்டனில் உள்ள கார்டியன் மற்றும் அல் ஜசீரா மற்றும் ஏ.எஃப்.பி உள்ளிட்ட முக்கிய செய்தி...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புதிய கணக்காளர் நியமனம்

யூ.கே. காலித்தீன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராக இருந்து  வருடாந்த இடமாற்றத்தை பெற்ற ஐ.எம்.பாரிஸ் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றிருந்தார். அவரின் இடத்திற்கு சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கணக்காளராக...

மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு

சிறுவர் சினேக நகரமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான சிறுவர் பூங்காக்கள் அழகுபடுத்தப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற சிறுவர் சினேக நகரமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ்...

கண்டி, லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவில் வாழும் 60 குடும்பங்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வு

(க.கிஷாந்தன்) " லெவலன்ட் தோட்டம் நியூ போரெஸ்ட் பிரிவு மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் நிச்சயம் வழங்கப்படும். அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் விரைவில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்." - என்று இலங்கைத்...

மேய்ச்சல் தரைகளை அடையாளப்படுத்துமாறு கோரிக்கை.

( துறையூர் சஞ்சயன் ) மட்டு அம்பாறை மாவட்ட வெல்லாவெளி, பட்டிப்பளை, செங்கலடி, வாகரை, வவுணதீவு, மகோயா ஆகிய செயலகப் பிரிவுக்குட்பட்ட கால்நடையாளர்கள் ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் தரையின்மையினால் மிகுந்த அசெளகரியத்துக்குள்ளாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இது குறித்து மேலும்...

அம்பாரை மாவட்ட ச.தொ.ச ஊழியர்கள் கடும் கவலை ஜனாதிபதியிடம் முறையிடவும் முடிவு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூ.மொ.விற்பனை நிலையங்களில் (Sathosa)பணியாற்றிய ஊழியர்கள் மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால்,கடும் கவலையடைந்துள்ளனர்.திடீரென இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது மட்டுமன்றி புதிய இடங்களில் அவசரமாப் பணிகளுக்குச் செல்லுமாறும் இவர்களுக்கு கடிதம்...

மட்டக்களப்பு உன்னிச்சை 6ஆம் கட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலயம்.

மட்டக்களப்பு உன்னிச்சை 6ஆம் கட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியாரின் ஆலயம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரினால் இன்று திறந்து வைக்கப்பட்டது கடந்த அசாதார சூழ்நிலை காலப்பகுதியில் சேதமடைந்த மட்டக்களப்பு உன்னிச்சை 6ஆம் கட்டை புனித...

இன்று செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த கிருஸ்ண ஜெயந்தி பெருவிழா!

காரைதீவு நிருபர் சகா செங்கலடி பதுளை வீதி இராஜபுரம் அருள்மிகு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய வருடாந்த கிருஸ்ண ஜெயந்தி தீர்த்த உற்சவ பெருவிழா இன்று(7) திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இன்று...