ஊர்ச் செய்திகள்

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் “குடும்ப குதூகலம்” கலை நிகழ்வுகளும் கொண்டாட்ட நிகழ்வும்

 நூருள் ஹுதா உமர். சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 06 ஆம் ஆண்டை முன்னிட்டு கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற "குடும்ப குதூகலம்" கலைநிகழ்வுகளும் கொண்டாட்டமும் சனிக்கிழமை...

மட்டக்களப்பு – கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் மேற்கொண்ட விவசாச் செய்கையின் அறுவடை நீகழ்வு

(எஸ். சதீஸ்) மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள கரவெட்டி சமுர்த்தி வங்கி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாயத் தோட்டத்தின் அறுவடை நீகழ்வு  செவ்வாய் கிழமை வங்கி முகாமையாளர் பிரியதர்சினி அசோக்குமார் தலைமையில் இடம்...

மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்...

(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டத்தின்   மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஆயித்தியமலை, மகிழவட்டவான், நரிப்புல் தோட்டம் போன்ற கிராமத்தில் உள்ள பொதுக் கட்டிட வளாகங்கள், ஆலயங்கள்   போன்றவற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்  செவ்வாய்கிழமை (25) நடைபெற்றது. மண்முனை மேற்கு, வவுணதீவு...

எஸ்.பி.நாதனின் 20வருட கல்விச் சேவையினைப் கௌரவித்துசேவை நலன் பாராட்டு விழா

எஸ்.கார்த்திகேசு அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் அமைந்துள்ள விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலய அதிபராக சேவையாற்றி கடந்த மாதம் ஓய்வுபெற்ற எஸ்.பி.நாதனின் 20வருட கல்விச் சேவையினைப் கௌரவித்து பாடசாலை சமூகத்திகரால்  பாராட்டி பொன்னாடைப் போர்த்தி...

லிந்துலை சரஸ்வதி பாடசாலையில் சுகாதார முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்.

லிந்துலை சரஸ்வதி பாடசாலையில் சுகாதார முறைகளை பின்பற்றி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம். நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில்   இன்று சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 11ம், 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்....

உகந்தை முருகனாலயத்தின் ஆடிவேல்விழாவையொட்டி சிரமதானம்!

வரலாற்று சிறப்புமிக்க உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழாவையொட்டி சமகாலத்தில் பரவலாக சிரமதானங்கள் இடம்பெற்றுவருகின்றன. ஆடிவேல் விழா எதிர்வரும் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 4ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.அந்தவகையில் வழமைபோல திருக்கோவில் வலயக்கல்விப்பணிமனையினர் நேற்றுமுன்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையிலhன குழுவினர் அங்கு சென்று பாரிய சிரமதானத்தை மேற்கொண்டனர். இஙகு பணிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்கள் சிரமதானத்திலீடுபடுவதைக்காணலாம். படங்கள்  காரைதீவு ...

சம்மாந்துறையில் நூல் வெளியீட்டு விழா

(அ.அஸ்வர்)   சம்மாந்துறை எம்.எம். நெளஸாத் எழுதிய " பூச்செண்டுபோல் ஒரு மனிதன் " எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நாளை (28) ஞாயிற்றுக்கிழமை காலை 08.45 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்...

காரைதீவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் தீமிதிப்புவைபவம்!

காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் (26)வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. அங்கு ஆலயத்தலைவர் பூசகர்கள் முன்னே தீமிதிக்க தேவதாதிகள் பின்னே தீமிதிப்பதையும் காணலாம்.

பாடசாலை ஆரம்பிப்பதற்கு வசதியாக தம்பிலுவில் தேசிய பாடசாலையில் சிரமதானம்!

திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை ஆரம்பிக்கும் முதல்கட்ட செயற்பாடாக பாடசாலை அதிபர் செல்லத்துரை ரவிஸ்கரன் தலைமையில்  சிரமதானமொன்று இடம்பெற்றது.  பாடசாலைச்சூழல் சுத்தம் செய்யும் நிகழ்வில் சிரேஷ்ட கிராம உத்தியோகத்தர் கண.இராசரெட்ணம் முன்னிலையில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில் பாடசாலை அதிபரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது. இன் நிகழ்வில் 75குடும்பங்கள் பங்கேற்றனர். அதன்போதான படங்கள. படங்கள்...

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் கணேசன் பிரபாகரனின் முயற்சியில்

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் கணேசன் பிரபாகரனின் முயற்சியில் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபா பெறுமதியான மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன. ஏறாவூர் நகர சபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின்  உறுப்பினர் கணேசன் பிரபாகரன் அவர்களின் பரிந்துரையில்...

கனடா சுவாமி விபுலாநந்தர் கலைமன்றத்தின் கொரோனா நிவாரணம்

(காரைதீவு  நிருபர் சகா) கனடா சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்ம் ஒரு தொகுதி கொரோனா பாதிப்புக்கான நிவாரணங்களை முல்லைத்தீவு வாகரை மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கு வழங்கிவைத்தது. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திற்கான உலருணவு நிவாரணப்பொதிகள் நேற்று புதியவளத்தாப்பிட்டி பளவெளிக்கிராமத்திலும் மல்வத்தை கணபதிபுரம் கிராமத்திலும் வழங்கிவைக்கப்பட்டன. பெண்கள் தலைமைதாங்கும் அறுபது குடும்பங்களுக்கு இப்பொதிகள் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமாரின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது. காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர்...

கல்முனை  கடற்கரை அம்மன் ஆலயத்தில் சிரமதானம்.

செ.துஜியந்தன் கல்முனை  கடற்கரை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி சடங்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய சுற்றுப்புறச் சூழல் கல்முனை இளைஞர்களினால் இன்று(26) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதை காணலாம்

கோறளைப்பற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்.

(சுஆத் அப்துல்லாஹ்) குடிநீர் வசதிகளைப் பெற்றுக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு  இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பெற்றுக் கொள்ள சிரமப்படும்...

இணைகரம் இளைஞர்கள் ஒன்றியத்தின் நிவாரணப்பணி.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இணைகரம் இளைஞர்கள் ஒன்றியம்  அமைப்பானது பல்வேறு நிவாரண  உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.. அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச...

கல்முனையில் பறந்த 17 தட்டு பொட்டிப்பட்டம்

(நிப்றாஸ் மன்சூர்) கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை  மாலை நேர பொழுது போக்கு செயற்பாடாக  வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து  வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேவேளை  கல்முனையை சேர்ந்த இளைஞர்கள்...

மட்டு மாவட்ட முன்னாள் அரச அதிபரின் ஏற்பாட்டில் தொடரும் நிவாரணப்பணிகள்

நிவாரணப்பணி 5ம் கட்டம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமது வருமானங்களை இழந்துள்ள அன்றாடம் தொழிலில் ஈடுபடுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, 38ம் கொலனி, கோட்டைக்கல்லாறு மற்றும் மட்டக்களப்பின் சில புறநகர்...

பொத்துவில் ஊறணி கிராம மக்களுக்கு ‘அன்பேசிவம்’ அமைப்பின் உலருணவுப்பொதிகள்.

கொனாராநெருக்கடிக்காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்துக்குள்ளான அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியிலுள்ள  பொத்துவில் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய ஊறணிக் கிராம மக்களுக்கு சுவிஸ் 'அன்பேசிவம்' அமைப்பின் ஏற்பாட்டில் 150 உலருணவுப்பொதிகள் நேற்று(24) பொத்துவில் பிரதேச செயலாளர்...

ஸஹிரியன் பிரிமியர் லீக் ( ZPL ) சீசன் 2 கிறிக்கட் சுற்றுப் போட்டி மறு அறிவித்தல் வரை...

எம்.எம்.ஜெஸ்மின் அஸ்ஹர் இப்றாஹிம் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான ” ஸஹிரியன் பழைய நண்பர்கள் ஒன்றியம் ( Zahirian Old Friends Association ) ( SOFA) ஏப்ரல் விடுமுறையின் போது  மெற்றோபொலிடன்...

படுவான்கரையின் எல்லைப்புற மக்களுக்கு சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் உதவிக்கரம்.

சுவிஸ் லுட்சேர்ன் எம்மன்புறூக்கே அமைந்துள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஸ்தாபகரும் பிரதம குருவும் "சிவாகம துரந்தரர்"சிவ ஸ்ரீ இராம சசிதரக்குருக்கள் ,மற்றும் இராஜராஜேஸ்வரி அம்பாள் அடியார்களால் வழங்கப்பட்ட 85 உலர் உணவு...

கல்குடா மஜ்லிஸ் ஷூரா சபையினால் இன்று பல இடங்களில் இலவச முகக் கவசங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் அனைவரையும் முகக் கவசம் அணியுமாறு கோரியுள்ளதுடன் அதனைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதற்கிணங்க எமது கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் கோரிக்கைக்கு...