இன்று 7கோடிருபா செலவில் கல்முனை காரைதீவு கடற்கரைவீதி கார்ப்பட் இடும் பணி ஆரம்பம்.

(வி.ரி.சகாதேவராஜா


காரைதீவு முதல் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முதல் காரைதீவு வரையிலான 3. 4 கிலோ மீற்றர் கடற்கரை வீதியை  காபட் வீதியாக புனரமைக்கின்ற வேலைத்திட்டம் இன்று  (21) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சாஹிரா கல்லூரி சந்தியில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஒருலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் குறித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 03மாதங்களுள் கார்ப்பட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தரும்  முன்னாள் உயர் கல்வி துறை பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் புதல்வருமான தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டிலான கால்கோள் விழாவில் பெரமுனவின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்முனை மேயர் எ.ம்.றக்கீப்  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரும் அழைக்கப்பட்டு உள்ளனர்.