லிட்டில் பட் பாலர் பாடசாலையின் பட்டமளிப்பு மற்றும் கலைவிழா

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

லிட்டில் பட் பாலர் பாடசாலையின்  (Little Buds Montessori School) பட்டமளிப்பு மற்றும் கலை நிகழ்வானது பாலர் பாடசாலை அதிபர் .திருமதி எம்.மிதுலா தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில்  24ம் திகதி இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக  முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி
மகளிர், சிறுவர் விவகார சமூக வலுவூட்டல் அமைச்சின் முதன்மைப் பயிற்றுநர் முத்துராஜா புவிராஜா கலந்து கொண்டார்.

2024ம் ஆண்டு  பாடசாலை செல்லவுள்ள சிறார்கள் இதன் போது அதிதிகளினால் சான்றிதழ்கள் வழக்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் பாலர் பாடசாலை மாணவ  மாணவியரின் கண்கவர் நடனங்கள் மற்றும் கலை நிகழ்வுகள் இதன் போது அரங்கேற்றப்பட்டது.

இந் நிகழ்வில்  முன்பள்ளி  அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.மேகராஜ், லிட்டில் பட் பாலர் பாடசாலையின் பணிப்பாளர்எஸ். முகாந்தன், எஸ். பரனிதரன், வாகரை நிர்வாக உத்தியோகத்தர் வி. சிவராஜன்  என பலர் கலந்து கொண்டனர்.