இலவச சீருடை மற்றும் ,புத்தகம் வழங்கும் தேசிய விழா நிகழ்வும்

க.ருத்திரன்
கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி இலவச சீருடை மற்றும் ,புத்தகம் வழங்கும் தேசிய விழா நிகழ்வும், ‘தாயாகக் கரம் கொடும்போம்’   என்ற தொணிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் இன்று -15 நடைபெற்றது.
இதன்போது வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு  அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் பிரத அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.ஜெயக்குமணன் உட்பட பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்