காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நேற்றுவரை 78 கொரனா நோயாளிகள்.இன்று 17பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

(வேதாந்தி)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்   நேற்றுவரை 78 கொரனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 67பேரும் பெண்கள் 11பேரும் உள்ளடங்குகின்றனர்.அத்துடன் இன்று காலை திருமலையிலிருந்து வரும் 17 பெண்கள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

தற்போது அனுமதிக்கபட்டுள்ளவர்களி்ல் 28பேர் கடற்படையினர் என்பதுடன் 30பேர் குவைத்நாட்டிலிருந்து வந்தவர்களெனவும்ஏனையோர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 70 கட்டில்களின் எண்ணிக்கை தற்போது 100ஆக அதிகரிப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் காத்தான்குடி  ஆதாரவைத்தியசாலையில் 100நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கல்லடி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 63 கடற்படையினருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதில் 10பேரின் மாதிரிகள் நேற்றுபெறப்பட்டதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.