“விபுல விருட்சம்” நூல் வெளியீட்டு விழா.

( வி.ரி. சகாதேவராஜா)  காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 40 வருட நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட “விபுலவிருட்சம்” KSC@40 என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பித்தார்.
முதற் பிரதியை தலைவர் சாந்தன் பிரதம அதிதி மகேசனிடம் வழங்கி வைத்தார்.
ஏனைய அதிதிகளான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்    காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட அதிதிகளுக்கும் அவர் வழங்கி வைத்தார்.
மலர் ஆசிரியர் முன்னாள் தலைவர் த.தவக்குமார் நூலாக்ககுழு ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா செயலாளர் எஸ்.கிருசாந் முன்னிலையில் நிகழ்வு நடைபெற்றது.