இன்றும் காலனிய தந்திரோபாயம்

காலனித்துவம் எனப்படுவது “பொருளாதார ஈட்டத்திற்காக ஆதிக்க வேட்கை கொண்ட நாடொன்று இராணுவ வல்லமையின் ஊடாக ஏனைய நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் அதிகாரத்திற்கு உட்படுத்தல் காலனித்துவம்” என சுருக்கமாக குறிப்பிடலாம். ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளினை போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஸ்பானியர், பிரான்ஸியர் போன்றோர்கள் அடிமைப்படுத்தி அரசியல், பொருளாதாரம், வணிகம் மற்றும் இராணுவ அதிகாரத்துடன் செயற்பட்டமையும் காலனித்துவத்தின் ஊடாக சமயம், பண்பாடு, உணவு, கல்வி, கலை, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தமது ஆதிக்கத்தினை உள்@ர் மக்கள் இடத்தில் திணித்து பொருளாதார ரீதியாக நன்மைகளை பெறுவதே தூர நோக்கமாகும். இரண்டாம் உலகப் போரின் பி;ன்னரான காலப்பகுதியில் மேற்கு ஐரோப்பா, சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, சினா போன்ற நாடுகள் சமகாலத்தில் நவகாலனித்துவ சிந்தனை செயற்பாட்டின் ஊடாக வலுப்படுத்தி வருகின்றது.

காலனிய சிந்தனையின் ஊடாகவே தமது நோக்கினை அடைவதற்காக கல்வி, மதம், இராணுவ வல்லமை, தந்திரோபாயம், தொழிநுட்பம் என்பவற்றினை பிரதானமாக பயன்படுத்தினர். உள்@ர் மக்களிடத்தில் பாரம்பியமாக காணப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் போக்கு, உள்@ர் மொழி, தொழில், கலைகள், உள்@ர் வைத்தியம் என பல்வேறு விடயங்களில் காலனித்துவ சிந்தனையினை திணித்தனர். இதனால் உள்@ர் மக்களின் பாரம்பரிய மரபுகள், உள்@ர் கலைகள், உள்@ர் வைத்தியம், தனித்துவம் மற்றும் சமூக அடையாளம் என்பவற்றினை படிப்படியாக இழக்கத்தொடங்கினர்.

பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவதற்கு முன்னரும் உள்@ர் மக்கள் தமது வாழ்கை ஒழுங்கில் சில ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததுடன் இக் காரணியும் காலனித்துவத்தினை நிலை நாட்டுவதற்கு துணையாக அமைந்திருந்தது. பின்னர் காலனித்துவ சிந்தனை குறித்து உள்@ர் மக்களினை தம்வசப்படுத்தி திட்டமிட்டு தமது ஆதிக்கதினை நிலைநாட்டினர். தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நகரமயமாக்கம், மத்தியதர வர்க்கம், நுகர்வு பண்பாடு என உள்@ர் மக்களின் வாழ்வியலினை விட்டு காலனித்துவ சிந்தனையான மேற்கு ஐரோப்பியர்களின் திட்டத்தினை வலுப்படுத்தும் வகையில் அடிமையானவர்களாக உருவாக்கினர்.

வளர்ச்சி, நாகரீகம் அடைதல், சாதி மற்றும் சமூக ஒடுக்கு முறையில் இருந்து விடுபட வேண்டும் என்றும் நாங்கள் மத்தியத்தர வர்க்கம் என தம்மை மாற்றிக்கொண்ட சமூகத்தினால் பாரம்பரியங்களின் வாழ்க்கை ஒழுங்கு, கலை செயற்பாடு, பொருளாதார தேவை என்பன திட்டமிப்படப்பட்டு ஒரு சாரர் நன்மைக்காக கட்டமைக்கப்பட்டது. இந் நிலைக்கு உள்வாங்கப்பட்ட உள்@ர் மக்களின் வாழ்வியல் நியமங்கள் யாவும் தலைகீழாக்கப்படுகின்றது. இம் மாற்றத்தின் தொடக்கப்புள்ளி காலனித்ததுவத்தின் பெரும் வெற்றிச் செயற்பாடாகும்.

நகரமயமாக்கம் உழைப்பிலும் பண்பாட்டிலும்; படைப்பாற்றல் உள்ளவர்களாக இருந்த உள்@ர் மக்களை மாற்றியமைக்கவும் படைப்பாற்றலினை இல்லாது செய்து “மிசனரி கல்வி” என்ற முறையின் ஊடாக அறிவாற்றல், விழிப்புணர்வு, சிந்தனை வளர்ச்சி என்பதன் ஊடாக காலனித்துவ கொள்கையினை பரப்பவும் தம் இலக்கினை நிறைவேற்றும் வகையிலான ஒரு சமூகத்தினை உருவாக்கினார்கள். நகரத்தில் வாழ்பவர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர்.
மத்தியதர வர்க்கம் உள்@ர் வாழ்வியலினை விட்டு காலனித்துவ சிந்தனையான ஐரோப்பியர்களின் திட்டத்தினை வலுப்படுத்தும் வகையில் அடிமையானவர்களாக கல்வி, பொருளாதாரம், அறிவு, அரசியல் பங்கேற்பு ஆட்சி உரிமை என்பவற்றில் தம்மை உயர் சமூகமாகவும் மத்தியதர சமூகமாகவும் காலனித்துவத்தின் மூலம் உருவாக்கினர் எனலாம். பாரம்பரியம், பண்பாடு, வாழ்வியல் போக்கு, உள்@ர் மொழி, உள்@ர் தொழில், உள்@ர் வைத்தியம் உள்@ர் கலைகள் என்பற்றினை “டுழஉயட” தரமற்றவை என்று கூறுபவர்களாகவும் நாங்கள் படித்த மத்தியத்தரவர்க்க மக்களாகவும் ஏனைய உள்@ர் மக்கள் பாமரர்கள் என்று அடையாளப்படுத்தும் சமூகமாக காலனித்துவ சிந்தனையின் மூலம் உருவாக்கப்பட்டார்கள்.

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் நுகர்வு பண்பாடு அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இவை காலனித்துவத்தின் ஊடாக பெரும் நஞ்சினை விதைத்த செயற்பாடாகவே நுகர்வு பண்பாடு காணப்படுகின்றது. பாரம்பரியமாக உள்@ர் உற்பத்தியினை செய்து வரும் சமூகமாக காணப்பட்ட மக்கள் காலனித்துவத்தின் பின்னர் கட்டமைக்கப்பட்டு நுகரும் மனிதர்களாக தம்மை மாற்றிக் கொண்டனர். அதாவது விவசாயம், உள்@ர் வைத்தியம் தொடங்கி உள்@ர் கலைகள் வரை இன்று நுகர்வு பண்பாட்டினை வெளிப்படுத்துவதாக உள்ளன.
காலம் காலமாக உள்@ர் கைத்தொழில், நாட்டு வைத்தியம், உணவு பழக்கவழக்கம், ஆடை அணிகலன், உள்@ர் மொழி மற்றும் மகிழ்ச்சிக்கு பொழுதுபோக்கிற்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்குமான பாரம்பரிய சடங்கு முறைகள் மற்றும் கூத்துக் கலைகள் இன்று நுகர்வு பண்பாடாக மாறியுள்ளதுடன் கலையினை பிரயோக முறையில் ஆற்றுகையினை மேற்கொண்டு திருப்தி அடைந்த மனிதன் இப்போது கலையினை கூட நுகரும் பொருளாக மாற்றியுள்ளான்.

காலனித்துவம் அறிமுகப்படுத்திய உணவு பழக்கவழக்கம், ஆடை அணிகலன் ஆங்கில மருத்துவம், ஆங்கிலம் மொழி, இயந்திர மயப்படுத்தப்பட்ட உற்பத்தி தொழில், மேற்கத்N;தயர்கள்; கலை, பண்பாடு என்பன காலனித்துவத்தின் ஊடாக எம் மத்தியில் வந்துள்ளதுடன் பின் காலனித்துவத்தின் ஊடாக இன்றும் விட்டு போகாது சிந்தனை செயல் அனைத்திலும் தொக்கி நிற்கின்றது.

பண்பாட்டுக் கலப்பு காலனித்துவம் ஏற்படுத்திய பாதிப்புக்களில் அடிப்படையானது பாரம்பரிய மரபுகள் அனைத்தையும் இல்லாமல் செய்து மேற்கு ஐரோப்பிய பண்பாடு, கலாசாரம் என்வற்றினை அறிமுகப்படுத்தியது. உள்@ர் பாரம்பரிய பண்பாடுகள் அழியவும் இல்லாது செய்யவும் ஒரு ஆயுதமாக பண்பாட்டுக் கலப்பு மூலமாக மேற்கொள்ளப்படுகின்றது. கால போக்கில் பூர்வீக பழக்க வழக்கம் தொடங்கி சமய, சடங்கு சம்பிரதாயம்;, உணவு பழக்கவழக்கம், மற்றும் கலாசார இழப்பிற்கும் ஐரோப்பிய பண்பாட்டுக் கலப்பிற்கும் காலனித்துவம் காரணமாக அமைந்தன. “ஒற்றை பண்பாட்டு பரவலாக்கம்” எனப்படும் ஐரோப்பியர்களின் பண்பாடானது கலப்பு, பரவலாக்கம் அடைந்து இன்றும் காலனித்துவம் என்ற மரத்தினை உள்@ர் மக்கள் மத்தியில் இருந்து அழிக்க முடியாது பின் காலனித்துவத்திலும் அதன் தாக்கத்தினை திணித்து வளர்ந்து வருகின்றது.

உள்@ர் கலையில் காலனித்துவத்தின் தாக்கத்தினை சுருக்கமாக நோக்கினால் கலையில் காலனித்துவத்தின் தாக்கமானது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. உள்@ர் கலைகளுக்கு என்று தனியான மரபினையும் மதிப்பினையும் கொண்டு காணப்பட்டன. சமூகமாக கூடி கலையினை ஆற்றுகை செய்தல், பார்த்தல், கலையினை ரசித்தல் என்ற விடயம் பாரம்பரியகலையில் இருந்து. மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாது காணப்பட்டன ஆனால் காலனித்துவத்தின் வருகையினை தொடர்ந்து

கூட்டுக்கலையினை தனிக்கலையாக பார்த்தல்
• பாரம்பரியமாக அழிந்து வந்த கலையினையும் கூட்டுப்படைப்பினையும் எழுத்துருவாக்கி தனி மனித படைப்பாக(தனிப்படைப்பு) தனது கலையாக உரிமைக்கொண்டாடல்.
• அனைவரும் கூடி ஆற்றுகையினை மேற்கொண்ட பாரம்பரிய (கூத்துக்கலைகள்) கலையினை ஆற்றுவோர், பார்ப்போர் கலை என பாகுப்படுத்தல் ரசனைக்காகவும் நுகர்வுகாகவும் மட்டும் கலையை படைத்தல்.
• வாழ்வியலோடு ஒன்றித்தக் கலையினை வணிக நோக்காகவும் நுகர்வு கலையாகவும் மாற்றியமைத்தனர்.
• இணைப்பாக்கக் கலை அதாவது பாரம்பரிய கலையும் காலனித்துவ கலையும் சேர்ந்து உள்@ர் கலையினை தாழ்த்தி தரமற்றதாக்கி பின் காலனித்துவத்தில் புதிய கலையாக படைக்கப்படுகின்றன.
• உள்@ர் கலைகளை (டுழஉயட யுசவள ) என்று கூற டுழஉயட தமிழ் வடிவம் தரமற்றது இன்று தரமற்ற கலைகள், கீழ் நிலை சமூகத்தினரின் கலை என பாகுப்படுத்தி தரமிழக்கச் செய்துள்ளனர்.
• பிரயோகத்தன்மை, ஆற்றுகை வெளிப்பாடு கலைஞரிடம் கற்று ஆவணமாக ஆற்றுகை மேற்கொள்ளும் முறையில் இருந்து விடுப்பட்டு நூலகத்திலும் தனி ஆய்வுகளிலும் எழுத்துருவாக்கம், புகைப்படம், ஒலிப்பதிவுகள் இறுவெட்டுக்கள் என ஆவணப்படுத்தி வைக்கும் முறையாக மாறியுள்ளன.

இவ்வாறு காலனித்துவத்தின் ஊடாக பாரம்பரியக்கலையில் ஏற்பட்ட பாதிப்பினை கூறிக்கொண்டே செல்லமுடியும். அத்தோடு பல கலையின் இருப்பினை இல்லாமல் செய்துள்ளது. மேற்கு ஐரோப்பியர்கள் உள்@ர் கலையினை களவாடியது மட்டுமன்றி கலைப்பொருட்களினையும் எடுத்து சென்று தங்களின் கலையாக காட்சிப்படுத்தி உரிமை கொண்டாடுபவர்களாக காணப்படுகின்றனர். காலனித்துவமானது கலையில் ஏற்படுத்திய தாக்கமானது உள்@ர் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் பெரும்பாதிப்பாக உள்ளதுடன் பின் காலனித்துவத்தின் ஊடாக எடுத்து சென்ற கலைப்பொருளை கலை கோட்பாடாக கட்டமைத்து கல்வி முறையின் ஊடாக மீண்டும் கொடுத்துள்ளனர்.

காலனித்துவமானது மிகவும் நீண்ட காலப்பகுதியாகக் கொண்டதொரு அதிகாரச் செயற்பாடாக அமைந்திருந்தது. ஆனால் காலனித்துவத்தில் இருந்து விடுபட்டு நீண்;டகாலத்தினை தாண்டி அரசியல் ரீதியாக ஆட்சி அதிகாரத்தில் தேசம் காணப்பட்டபோதும் காலனித்துவம் ஏற்படுத்திய தாக்கமானது அரசியல், பொருளாதாரம்;, கல்வி, மொழி, சமயம் நம்பிக்கைகள், கலை, கலாசாரம், பண்பாடு, ஆடை, நிகழ்ச்சிகள் மற்றும் தனித்துவமான வாழ்வியல்முறை என தற்காலத்திலும் மக்களிடையே காணப்படுகிறது. காலனித்துவத்தின் பாதிப்புகளில் இருந்து உள்@ர் மக்கள் விடுபடாத நிலையினையே குறிக்கின்றது.
காலனித்துவமானது இராணுவ ரீதியான செயற்பாடு மற்றும் கல்வி, நிர்வாக செயற்பாடுகள், செல்வங்களை சேர்த்தல் என்று அரசியல், பொருளாதார கட்டுப்பாட்டின் ஊடாக கட்டமைக்கின்றது. இன்று எம் மத்தியில் உலகமயமாக்கல், நவீனமயப்படுத்தல், பின் காலனித்துவம், பின் நவீனம் என பல விடயங்கள் தோன்றியுள்ளதோடு காலனியமயமாக்கல் முறையானது உள்@ர் கலைகள், சடங்குகளினையும், வாழ்வியல் நம்பிக்கைகளினையும் பாமரத்தன்மை, மூடநம்பிக்கை எனவும் அறிவொளி இயக்கம் விஞ்ஞான பூர்வமான கோட்பாடுகள் நவீனமயமாக்கலின் உள்ளிருந்து கேள்விக்கு உற்படுத்தும் செயற்படாக பின் காலனிய சிந்தனையின் தாக்கத்தினை வைத்துக்கொண்டு நோக்கும் போது காலனித்துவம் மிக உறுதியான செயற்பாடகவே காணப்படுவதோடு நவகாலனியம் புதிய ஆக்கிரமிப்பு செயற்பாhக நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறுவனம், பல்தேசிய கம்பனிகள் மூலமாக பொருளாதார வணிக சுரண்டள்களினை மேற்கொண்டு சிந்தனை, செயற்பாடுகளிலும் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.

எனவே “காலனித்துவம் எம்மை கட்டமைப்பதாக உள்ளதோடு காலனிய முகவர்களாக நாம் செயற்படுகின்றோம். காலனித்துவம் திணிக்கின்றதனை நாம் ஏற்றுக்கொண்டு காலனியத்திற்கு செல்வாக்கு செலுத்திக் கொண்டு இருகின்றோம் என்பதுதான் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.”

ச.புஸ்பலதா,
நுண்கலை சிறப்புக் கற்கை,
நுண்கலைத்துறை,
கலைகலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.