தந்தை செல்வாவின் சிலைக்கு சூரிய மின்கலம் பொருத்தப்பட்டது.(Video)

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா நினைவுப் பூங்காவில் செல்வா நினைவு தின  நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் கே.சோபனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம்,பா.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன் ஆகியோரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி தயாளகௌரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தை செல்வா நினைவுப்பூங்காவில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு சூரிய மின்கலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கி.துரைராஜசிங்கத்தின் ஏற்பாட்டில் பொருத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தந்தை செல்வா அவர்கள் தொடர்பான நினைவு உரைகளும் நடைபெற்றன.