நேற்று சமுத்திரத்தில் இடம்பெற்ற மடத்தடி மீனாட்சியம்மன்னின் தீர்த்தோற்சவம். 

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம் நிந்தவூர் மாட்டுப்பளை  மடத்தடி  ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின்  வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் நேற்று  (23) பௌர்ணமியன்று வங்கக் கடலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் கலாநிதி கி.ஜெயசிறில்  தலைமையிலான நிருவாக சபையினர் சுன்னம் இடிக்கும் கிரியைகளில் பங்கேற்ற பின்னர் அம்பாள் சித்திரத்தேரில் எழுந்தருளி  வீதியுலா இடம்பெற்றது.
உற்சவகால பிரதம குரு சிவாகமவித்யா பூஷணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள்  தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா மற்றும் சிவஸ்ரீ சபாரெத்தினக்குருக்கள்சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெற்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 இரண்டாவது அலங்கார உற்சவம் புதுவருடத்தில் 14 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1713916116035.jpgFB_IMG_1713916105314.jpgFB_IMG_1713916206997.jpgFB_IMG_1713916135830.jpgFB_IMG_1713916112070.jpgFB_IMG_1713916122113.jpgFB_IMG_1713916150500.jpgFB_IMG_1713916188497.jpgFB_IMG_1713916087004.jpg