உலக நாடக நாள் விழா 2024

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறை , உலக நாடக தினத்தை முன்னிட்டு கலை நிகழ்வுகளுடன் கூடிய இரு நாள் விழாவாக கொண்டாட இருக்கின்றது.

 

2024.03.27,28ஆம் திகதிகளில் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் காலை 09 தொடக்கம் இரவு 09 மணி வரை பல்வேறு நிகழ்வுகளை நடாத்தவுள்ளனர். முதல் நாள் ஆரம்ப நிகழ்வு புதன் கிழமை(27) மாலை 4.30 மணிக்கு இடம்பெற உள்ளது.

 

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அரங்கு, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கு, கதைசொல்லி மாஸ்டர் சிவலிங்கம் அரங்கு, நடிகமணி வி.வி.வைரமுத்து அரங்கு, அண்ணாவியார் நாகமணிப்போடி அரங்கு என ஐந்து அரங்குகளில் நாடகங்கள், இசை, இசைநடன அரங்காற்றுகைகள், மரபுக்கலைகள், கலந்துரையாடல் அரங்கம், கண்காட்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்தப்பட இருக்கின்றது .

 

நாடகத்துறைசார் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள், நாடக ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

 

நடன, நாடகத்துறை,

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்