சாதனையாளர் பாராட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கற்சேனை விஷ்ணு வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு நிகழ்வும் சேனையூர் சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வும் இன்று(26) செவ்வாய் கிழமை இடம் பெற்றது.

 

வித்தியாலய அதிபர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த 8வருடங்களாக தேசிய பொதுப்பரீட்சைகள், இணைப்பாட விதான செயற்பாடுகள் போன்றவற்றில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள் துணைநின்ற ஆசிரியர்கள், அதிபர் ஆகியோர் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும் கல்வி வலய கல்விப்பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

இதன்போது சேனையூர் 2 சிற்றிதழ் வெளியீடு செய்து வைக்கப்பட்டமையுடன் இதற்கான நயவுரையை ஆசிரிய ஆலோசகர் பு. சதீஸ்குமார் நிகழ்த்தினார்.

 

இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ். மகேந்திரகுமார், ந. குகதாசன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களான ரகுவரன், மூ. உதயகுமாரன், பாலர் பாடசாலை பணியக நிறைவேற்று பணிப்பாளர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.