16 வது நாளாக மூடப்பட்டநிலையில் திருக்கோவில் ஆதரவைத்தியசாலை.

(வி.ரி.சகாதேவராஜா)  திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தொடர்ந்து 16 வது நாளாக இன்று(26) செவ்வாய்க்கிழமையும் எவ்வித வைத்திய சேவையுமின்றி மூடப்பட்டு காணப்படுகிறது.
 இவ் வைத்தியசாலை திறக்கப் பட வேண்டும் என்று  இதுவரை  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்து இருக்கின்றன.
இதனால்  அந்த நீண்ட பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 32,000 தமிழ் மக்கள்  தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .
கடந்த 11 ஆம் தேதி இடம் பெற்ற திருக்கோவில் ஆதார வைத்தியசாலை மீதான ஆர்ப்பாட்ட  சம்பவமே இதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.
 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தமது பிடியில் அதாவது சம்பந்தப்பட்ட சகலரையும் கைது செய்ய வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றது.
அதேவேளை வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் கல்முனை திருமலை கொழும்பு என்று சென்று வைத்தியசாலையை எப்படியாவது திறக்க வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். மேலும் பிரதேச செயலாளர் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் போலீசார் இதற்கு பக்கபலமாக இருக்கின்றனர்.
இதுவரை நடந்த சந்திப்புகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
 இதனால் 16 நாட்களாக இன்னும் வைத்திய சாலையை திறக்க முடியவில்லை. பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர் என்பது மட்டும் உண்மை.