தமக்கு வழங்கப்பட்ட தேர்தல் கடமைகளைகளையும் பொறுப்புக்களையும் சரியாகவும் வினைத்திறனாகவும் நம்பிக்கை பேணும் வகையிலும் மேற்கொள்ள வேண்டும்

தமக்கு வழங்கப்பட்ட தேர்தல் கடமைகளைகளையும் பொறுப்புக்களையும் சரியாகவும் வினைத்திறனாகவும் நம்பிக்கை பேணும் வகையிலும் மேற்கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான பி.எச்.என்.ஜயவிக்ரம வேண்டிக்கொண்டார்.

2023 உள்ளூர் அதிகாரசபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வேட்புமனுக்களை கையேற்கும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று
(16) திருமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 18 ம் திகதி தொடக்கம் 21 ம் திகதி மதியம் 12 மணிவரை வேட்புமனு கையேற்கும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க வேட்புமனு ஏற்கும் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று நடைபெற்றபோதே மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வேட்பு மனு ஏற்கும் கடமைகள் தொடர்பான விடயங்கள் இதன்போது திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் (பதில் கடமை) ஆர். சசீலன் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.