பொதுமக்களின் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகின்றோம். ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் அறிக்கை

பொதுமக்களின் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகின்றோம். ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் அறிவிப்பு.

நாடு முழுவதுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று மற்றும் நாளைய தினங்களான 6/5/2024, 7/5/2024 ஆகிய தினங்களில் சுகயீன விடுமுறை அறிவித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம்.

60 ஆண்டுகளை கடந்துள்ள கிராம உத்தியோகத்தர் பதவிக்கு இன்றுவரை தனியாக சேவைப்பிரமாணம் வழங்கப்படாமலுள்ளது, தனியான சம்பள படிநிலை இன்மை, அதிகரிக்கப்படாத கொடுப்பனவுகள் என்பனவற்றை காரணங்காட்டி அவற்றுக்கான தீர்வினை கோரியே பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது அவர்களது கோரிக்கையினை ஏற்கும் அரசும், அரசாங்கமும் எமது பதவியணியினரை பாராமுகமாக உள்ளமை வேதனையளிக்கின்றது. இன்றுவரை

சீருடை கொடுப்பனவு (வருடாந்தம்) 5000/-,

துவிச்சக்கர வண்டி கொடுப்பனவு 600/-, (மாதாந்தம்)

காகிதாதிகள் கொடுப்பனவு (வருடத்திற்கு) 1500/-

எரிபொருள் இல்லை

தொடர்பாடல் கொடுப்பனவு (மாதாந்தம்)  750/-

அலுவலக வாடகை (மாதாந்தம்) கிராம பகுதிகளுக்கு 1000/-, நகர் பகுதிகளுக்கு 1500/-

24 மணித்தியாலங்களும் வாராந்தம் கடமையாற்ற தயார் நிலையிலுள்ள எமக்கு தினமும் 8மணித்தியாலம் வாரத்தில்  5 நாட்கள் கடமையாற்றும் உத்தியோகத்தர்களது சம்பளமே வழங்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான கொடுப்பனவுகளை உயர்த்துவதுடன் சேவைப்பிரமாணமும் வழங்க கோரி மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களிலுமுள்ள கிராம உத்தியோகத்தர்கள் இப்பணிபகிஸ்கரிப்பில் ஈடுபடுவதனால் எமது மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இன்றைய தினமும், நாளையதினமும் தமது சேவையினை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையே காணப்படும் என்பதனை தெரிவித்தனர்.