மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பரீட்சைக்கு.

(சுமன்) கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இன்று 2023 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பிக்கப்படுகின்றது. பரீட்சைக்காக மாணவர்கள் தாயராகி வருகின்ற நிலையில் கிழக்கு மாகாணத்திலும் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று ஐந்து கல்வி வலயங்களிலுமுள்ள பரீட்சை நிலையங்களில் அதிக உஷ்ண நிலையான கால நிலைக்கு மத்தியிலும் பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் காலையில் இறை ஆசீர்வாதம் மற்றும் பெற்றோர்களின் வாழ்த்துக்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளித்ததை காணக்கூடியதாக இருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் இணைப்பு பரீட்சை 14 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறை மாவட்டத்தில் 10037 பாடசாலை பரீட்சாத்திகளும் 3865 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இதே வேளை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 13826 ஆங்கில மொழி மூலம் 66 சிங்கள மொழி மூலம் 10 மாணவர்களுமாக மொத்தமாக இம்முறை 13902 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்

பரீட்டைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வேண்டிய போக்குவரத்து வசதிகளும் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சகல பரீட்சை நிலையங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.