அம்பாறையில் மின் துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, சம்மாந்துறை, நிந்தவூர், கல்முனை, சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை (08)  முதல் இம்மாதம் 31ஆம் திகதி வரை மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வீரமுனை, வீரச்சோலை ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) காலை  08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், ஒலுவில், தியேட்டர் வீதி, முஸ்தபாபுரம், ஜலால்புரம், வேளவாலோடை, 2ஆம், 3ஆம் குறுக்கு வீதிகளில் அதே நேரத்தில் புதன்கிழமை இன்று  (09) மின் தடைப்படும்.

சொறிக்கல்முனை, ஹிஜ்ரா சந்தி, மல்கம்பிட்டி வீதி, ப்லக் ஜெ ஈஸ்ட், ப்லக் ஜெ வெஸ்ட், மலையடிகிராமம் 01, 02 ,03, 04 கல்லரைச்சல் 01, 02, 03 கைகாட்டி, நைனாகாடு, ஹாஜா வீதியிலிருந்து வைத்தியசாலை வீதி, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் 10ஆம் திகதி காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

07ஆம், 15ஆம் கொலனி, வேப்பயடி மற்றும் அன்னமலை பகுதி, சின்னப்பாலமுனை, அட்டள கிராமம், மல்கம்பிட்டி, நைனாகாடு ஆகிய பகுதிகளில் 12ஆம் திகதியும் சின்னப்பாலமுனை மற்றும் அட்டள கிராமம் ஆகிய பகுதிகளில் 14ஆம், 21ஆம், 28ஆம் திகதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

22ஆம் திகதி யாட் வீதி, பிரதான வீதி, அம்மன் கோவில் வீதி, மருதமுனை, பாலையடி பிள்ளையார் வீதி, லெனின் வீதி காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளிலும் 30ஆம் திகதி ஒலுவில், தியேட்டர் வீதி, முஸ்தபாபுரம், ஜலால்புரம், வேளவாலோடை, 2ஆம், 3ஆம் குறுக்கு வீதிகளிலும் 31ஆம் திகதி அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவடி, ஹிஜ்ராபுரம், உடங்கா ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.