மட்டில் 16வயது இளைஞனுக்கும் கொரனா தொற்று. 34 ஆக உயர்ந்தது.

????????????????????????????????????

ந.குகதர்சன்

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இளைஞர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் பெகலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்து கொரோனா தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்று வரும் ஒருவருடன் பழகியவர் என்று தெரிய வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக இன்று சனிக்கிழமை ஏழாவது நாளாகவும் மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினை கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சகல பிரதான வீதிகளும் வெறிச்சோடி காணப்படுவதுடன், அனைத்து வீதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸாரின் நடமாட்டங்களும், அவசர தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் மக்களின் நடமாட்டங்கள் மாத்திரம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் முப்பத்தியொரு பேரும், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தில் ஒருவருக்கும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவருக்குமாக கொரோனா தொற்றுக்கு கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 கொரோனா தொற்றாளர்கள் இன்று வரை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.