வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது

( வவுணதீவு நிருபர் – எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் நேற்று (30) வெள்ளிக்கிழமை இரவு பெய்த கன மழையினால்  வெல்லாெவெளி பிரதேசத்திலுள்ள வெல்லாவெளி – மண்டூர் பிரதான வீதி நீரில் மூழ்கியுள்ளது
நேற்று இரவு பெய்த கன மழையினால் இவ் வீதியூடாக வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
இவ் வீதியில் நீர் வேகமாக செல்வதால் சிறிய போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இருந்த போதிலும் கனரக வாகனங்கள் செல்லக்கூடியதாக உள்ளது
இவ் இடங்களில் மக்கள் பாதுகாப்புக் கருதி பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்
இதேவேளை இப் பிரதேசத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளது