ஆன்ட்டி ரெக்கவரி தெரபி தற்போது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் விழப்புணர்வு அவசியம் – வைத்திய கலாநிதி தர்மராஜா வினோதன்

( வாஸ் கூஞ்ஞ) 

எய்ட்ஸ் நோயைப் பொறுத்தவரையில் ஆன்ட்டி ரெக்கவரி தெரபி தற்போது புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்ற போதிலும் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான வழிமுறைகள் எய்ட்ஸ் நோயாளிகளை எவ்வாறு பராமரிக்கலாம் அவர்களுடைய தேவைப்பாடு எவ்வாறு உள்ளது போன்றவற்றில் இன்னும் விழிப்புணர்வும் அவசியமாக இருக்கிறது என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்மராஜா வினோதன் இவ்வாறு தெரிவித்தார்.

டிசம்பர் முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்திலும் இவ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது

இவ் தினத்தை முன்னிட்டு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தர்மராஜா வினோதன் அவர்களhல் அவரின் பணிமனையில் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

2022 டிசம்பர் முதலாம் திகதி உலக எழுத்தில் தினம் சமத்துவத்தை உருவாக்குகின்ற தொனிப் பொருளோடு உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது

உலகளாவிய ரீதியில் எய்ட்ஸ் நோயானது பாரதூரமான அச்சுறுத்தலாக இருந்து வருகிறது கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் 48 மில;லியனுக்கு மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் தொற்றோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

இவர்களில் 1.5 மில்லியன் பேர் புதிதாக 2001 ஆம் ஆண்டின் பின் உலகளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்டவர்கள்

இலங்கையை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 400க்கு மேற்பட்டவர்கள் எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கின்ற அந்த சந்தர்ப்பத்தில் மன்னார் மாவட்டத்திலும் எய்ட்ஸ் நோயோடு அடையாளம் காணப்படுகின்றனர்.

எய்ட்ஸ் நோயைப் பொறுத்தவரையில் ஆன்ட்டி ரெக்கவரி தெரபி தற்போது புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கின்ற போதிலும் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான வழிமுறைகள்இ எய்ட்ஸ் நோயாளிகளை எவ்வாறு பராமரிக்கலாம்இ அவர்களுடைய தேவைப்பாடு எவ்வாறு உள்ளதுஇ போன்றவற்றில் இன்னும் விழிப்புணர்வும் போதிய நடவடிக்கையில் அவசியமாக இருக்கிறது என இவ்வாறு தெரிவித்தார்.