Rep102

3793 POSTS 0 COMMENTS

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதியளித்தது அமெரிக்கா

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்தித்து பேசியபோதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும்,...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடலட்டைகள் மீட்பு!

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகளை மண்டபம் அருகில் நேற்று வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக...

இலங்கைக்கு உதவத் தயார் – சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கு அவசியமான உதவிகளை வழங்குவது குறித்துக்...

இன்று முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாயாக அதிகரிப்பு!

நாட்டில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 22 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் திலான் மிருண்டா தெரிவித்துள்ளார். அதன்படி நேற்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து...

22 ரயில் சேவைகள் இரத்து – மக்கள் அவதி!

நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அலுவலக சேவைகள் உட்பட 22 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பிரச்சினை காரணமாக ரயில் ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி,...

மோதல் சம்பவம் குறித்த விசாரணை – மனித உரிமைகள் ஆணைக்குழு கந்தக்காடுக்கு பயணம்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திற்கு செல்லவுள்ளது. அங்கு இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, குறித்த குழு அங்கு செல்லவுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் அண்மையில்...

இந்த நாடு எதிர் காலத்தில் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தடைகள் நீக்கப்பட வேண்டும் – மாகாணசபை...

(வாஸ் கூஞ்ஞ) கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளைப் பெற முற்படுவது போல இந்த நாடு எதிர் காலத்தில் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தடைகளை நீக்கி...

அரசாங்கத்தினை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒன்றினைந்த அரசாங்கத்தை விரட்டுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ்...

புலம்பெயர் தமிழர்களாலேயே இலங்கையர்களுக்கு விடிவு கிடைக்கும் – நோர்வேயில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வெட்கமில்லை, இன்றும் பதவியில் உள்ளார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமை வேதனைக்குரியதாகவுள்ளது. இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மேம்படுத்த முடியும். ஜனாதிபதி உட்பட பிரதமர்...

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அமெரிக்கா பயணம்!

வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் ‘மாபெரும் பேரவை தமிழ் விழாவில்’ பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது!

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள்...

ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனு நிராகரிப்பு!

கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது...

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல்!

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை...

மக்களை சுரண்டும் எரிபொருள் மாஃபியாக்கள் – 8 இலட்சம் முச்சக்கரவண்டிகள் இந்த மாஃபியாவுடன் இணைந்து செயற்படுவதாக குற்றச்சாட்டு!

முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகளின் உரிமையாளர்கள் எரிபொருள் மாபியாவை உருவாக்கி அரச ஊழியர்களையும் பொதுமக்களையும் சுரண்டும் மோசடியான தொழிலை முன்னெடுத்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்யும்...

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு!

மூன்றாண்டுகளுக்கு பின்னர் நல்லூர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்கிழமை) யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய...

IOC யிடமிருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய தீர்மானம்!

LIOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான பணப்பரிமாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் குறித்த டீசல் இருப்புக்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்த...

பேருந்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிப்பு – குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாய்!

பேருந்து போக்குவரத்து கட்டணம் 22 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40...

அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு...

ராஜபக்ச குடும்பத்தின் நடவடிக்கைகளால் முழு நாடும் தற்போது ஸ்தம்பிதமடைந்துள்ளது – முஜிபுர் ரஹ்மான்!

ஆட்சியாளர்களின் தவறான தீர்மானங்களினால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் நிலைமை...

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவித்தல் இன்று வெளியாகின்றது!

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவித்தல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று கையளித்திருந்தது. போக்குவரத்து அமைச்சருக்கும், பேருந்து...