10ம் திகதிக்கு பின்னர் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்கள் பொலிஸில் பதியவும்

கொரோனா வைரஸ் பரவல் இலங்கையிலும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தம்மை பதிவு செய்யுமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராஜகிரியவிலுள்ள கொவிட்-19 பரவலைக் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் இருவர் இந்தியாவின் சென்னை நகருக்கு சென்று திரும்பியவர்களாவர். எனவே தான் சமூக பாதுகாப்பு கருதி இந்தியா சென்று திரும்பியவர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

தொற்று நோயான இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஊரடங்கு சமூக நலன்கருதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போது அதனை முறையாகக் கடைபிடித்து அரசாங்கத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அத்தோடு இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் தமது வீடுகளிலேயே 14 நாட்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.