(வேதாந்தி)
தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் நடைபெறவுள்ளது.
உலகப்பொருளாதார மகாநாடு நடைபெறும் Davos மண்டபத்தில் யூன் மாதம் 7,8,9ம் திகதிகளில் இம் மகாநாடு நடைபெறவுள்ளது.
உலகத்தின் நாலா பக்கங்களிலிருந்தும் 40ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து 600ற்கு மேற்பட்ட தமிழ் தொழிலதிபர்கள் இம் மகாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மகாநாடு பற்றி தெளிவூட்டும் ஆரம்பக்கூட்டம் கடந்த சனிக்கிழமை சுவிஸ்நாட்டில் ஓல்டன் நட்சத்திரவிடுதியில் உலகலாவிய The RISE நிறுவனத்தின் சுவிஸ்நாட்டிற்கான ஒருங்கினைப்பாளரும் தலைவருமான கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இவ் முன்னோடிக்கூட்டத்தில் ஐரோப்பிய சுவிஸ்நாட்டு தொழில் முனைவோர்களும், பலபுத்திஐீவிகளும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
தமிழர்களின் டாவோஸ் பொருளாதார மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து 35ற்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன் மகாநாட்டின் நிறைவுநாளில் இலங்கையிலிருந்து சுவிஸ்நாட்டுக்கு தமிழர்கள் இடம்பெயர்ந்த40 ஆண்டுகளை நினைவு கூறும் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.