முதன்முதலாக கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த மருத்துவர் பலி

முதன்முதலாக கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்த டொக்டர் லீ வென்லியாங், கொரோனாவைரஸ் தாக்குதல் காரணமாகஉயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (06) அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் வூறான் நகரிலுள்ள வைத்தியசாலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி குறித்த வைத்தியசாலையின் டொக்டர்  லீ வென்லியாங் (வயது 34) தனது கல்லூரி தோழர்களான ஏனைய வைத்தியர்களுக்கு   விரிவான தகவல் அனுப்பி எச்சரித்திருந்தார். இந்நிலையில் டொக்டர் லீயையும் கொரோனா வைரஸ் தாக்கியது. அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.