செட்டிபாளையம் மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா

மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்  மட்.பட்செட்டிபாளையம், மகாவித்தியாலயத்தில், விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நடும் விழா வியாழக்கிழமை(27) இடம்பெற்றது.
வித்தியால அதிபர் வ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மீள்குடியேற்ற மற்றும் புணர்வாழ்வு அமைச்சின் மேலதிக செயலாளர் சி.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,  மண்முனை தென் எருவில் பிரதேச செயலாளர் திருமதி.ந.வில்வரெத்தினம், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.அருள்ராசா, கிழக்கு மாகாண முன்னாள் மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்விச் சமூகத்தினர், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.