போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிரதேச செயலகம் மற்றும் பொதுஇடங்களில் பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அலுவலக உத்தியோகத்தர்களினால் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான சுவரொட்டிகள் (27) இன்று காட்சிப்படுத்தப்பட்டன.

பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் கலாநிதி சசிகரன் குறித்த போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.