அரச திணைக்களங்களில் அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும்

அரச திணைக்களங்களில் அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குண்டுச் சம்பவத்தினை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஊடரங்கு சட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குண்டுச் சம்பவத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, இராஜாங்க அமைச்சர்களாக எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அலிஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், சா.வியாளேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன் உட்பட இராணுவத்தினர், பொலிஸார் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சம்பவத்தினை சீர்செய்யும் வகையில் தொண்டர்களாக இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியும் என இராணுவ கொமாண்டர் அருண தெரிவித்தார்.

அத்தோடு கிழக்கு மாகாண பாடசாலைகளை தேவைப்படுமாயின் மேலும் மூடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

அத்தோடு திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் அரச திணைக்களங்களில் அரச நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மேலும் தெரிவித்தார்.