தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள்  அமைப்பின் தலைவரை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியளலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் நேற்று புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

 

அண்மையில் காணிப் பிரச்சனை ஒன்றில் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை முகநூலில் பதிவு செய்தது தொடர்பாக மட்டு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகன் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் பொலிஸார் அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்.

இந்த நிலையில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மீது  நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கடந்த 06 ஆம் திகதி புதன்கிழமை   ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் ஆஜராகிய போது அவரை  நீதவான் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் அவரை தொடர்ந்து எதிர்வரும்  20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.