Free Porn
xbporn

https://www.bangspankxxx.com

கிழக்கில் நாளை காணி விடுவிப்பு

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 10 ஏக்கர் காணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவித்தலுக்கமைய வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது அதன் ஒரு கட்டமாக குறித்த  காணி விடுவிக்கப்படவுள்ளன.

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெரும்பான்மையான காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடக்கு- கிழக்கு அபிவிருத்தி செயலணியில் உறுதியளித்ததுடன், அது குறித்து அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டிருந்தார்.

அதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலுள்ள இராணுவத்தினர் வசமுள்ள 10 ஏக்கர் காணி நாளைய தினம் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினரால்  அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இதுவரையில் இராணுவத்தினரின் வசமிருந்த 70 ஆயிரம் ஏக்கர் காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தனியாருக்குச் சொந்தமான, ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணிகளே இராணுவத்தினர் வசமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த காணிகளும் படிப்படியாக அதன் உரிமையாளர்களிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.