( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவின் புதுவட்டை கண்டத்தில் விவசாய போதனாசிரியர் எஸ். சசிகுமார் தலைமையில் நாற்று நடும் இயந்திரத்தின் மூலமும், பரசூட் முறையிலும், சாதாரண வீசிவிதைத்தலிலும் ஒப்பீட்டு ரீதியிலான முன்மாதித்துண்ட செய்கை நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம். பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி நித்தியா நவரூபன், பாடவிதான உத்தியோகத்தர்களான திருமதி லாவண்யா செந்தீபன், லக்ஸ்மன், மாறன் ஆகியோருடன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதே நிகழ்வு மாவடிமுன்மாரி கிராமத்திலும் தொழில்நுட்ப உதவியாளர் துஷாந்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
பரசூட் முறையிலான நெற்செய்கை, நாற்று நடும் இயந்திரத்தின் மூலமான நாற்றுநடுகையின் நன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் இம் முறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் என்பன முறையான செய்து காட்டல்கள் மூலம் விவசாய போதனாசிரியர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
ஏற்கனவே பரசூட் தட்டுக்களில் இடப்பட்ட நாற்றுகள் நடுகை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.