குருத்தோலை ஞாயிறு தினம் புனித வெற்றி அன்னை ஆலய பங்கில்.

( வாஸ் கூஞ்ஞ)

கத்தோலிக்க மக்களின் புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறுடன் (24) ஆரம்பமாகின்றது.

அன்னையாம் திருச்சபையானவள் குருத்தோலை ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்துடன் ஒவ்வொருவரையும் இயேசுவின் பாடுகள் . மரணம் , உயிர்ப்பு என்னும் மாபெரும் புனித மறை நிகழ்வை தியானிக்க அழைக்கும் நாளாக இது அமைந்துள்ளது.

இச்சிந்தனை ஊடாக அன்பு எவ்வளவு பெரியது என்பதை மக்கள் அறிய வேண்டும் என்ற இறைத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற இயேசு எருசலேம் நகர் நோக்கி புனித பயணம் நினைவு கூர்ந்து கத்தோலிக்க மக்கள் இந்த ஞாயிறு (24) தினத்தை நினைவு கூர்ந்தனர்.

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் ஒரு பங்கான பேசாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்கு மக்கள் ஞாயிறு (24) அன்று நினைவு கூறப்பட்ட கொண்டாட்டமே இந்நிகழ்வாகும்