கனகராசா சரவணன்)
எதிர்வரும் ஏப்பிரல் 19 ம் திகதி தியாக தீபம் அன்னை பூபதியின் 36 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அன்னை பூபதி மாதம் இன்று செவ்வாய்கிழமை (19) மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் சமாதிக்கு மலர் மாலை அணிவித்து மாலர் தூவி சுடர் ஏற்றி செலுத்தி ஆரம்பித்தனர்.
கடந்த 1988 ம் ஆண்டு இந்;திய இராணுவத்தினைரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டு மாமாங்கேஸ்வர ஆலைய முன்றலில் மாச் 19 ம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு ஏப்பில் 19 ம் திகதி உயிர்நீத்தார்.
இந்த தியாக தீபம் அன்னை பூபதியம்மா உண்ணாவிரதம் ஆரம்பித்த திகதியான மாச் 19 ம் திகதி தொடக்கம் ஏப்பிரல் 19 வரை அன்னை பூபதி மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டது இதனடிப்படையில் அன்னை பூபதி மாதத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் இன்று அன்னையின் சமாதிக்கு சென்று சாமாதியிலுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியதையடுத்து அன்னை பூபதி மாதத்தை ஆரம்பித்து வைத்தனர்.