மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம்.

  (ஹஸ்பர் ஏ.எச்)    திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட சுய உதவி குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு  (16) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் இயங்கும் பிரதேச சுய உதவி குழுக்களை மையமாக வைத்து மாவட்ட சுய உதவி குழு புதிய நிருவாக தெரிவுடன் அங்குராரப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் உட்பட பல விடயங்களை எதிர்காலத்தில் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன் ,சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றுத் திறனாளிகள்,பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.