மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம்

(ரக்ஸனா)

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றனது. மேல் சப்ரகமூவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரேலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், பல இடங்களில் மாலை வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இச்சந்தர்ப்பததில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. மேல், சப்ரகமூவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் சனிக்கிழமை(19) தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

இலங்கையில் தென்கிழக்கு மற்றும் கிழக்கே உள்ள கடற்பரப்பில், மேகமூட்டம் அதிகமாகக் காணப்படுவதால், திருகோணமலையிலிருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியத்தில் பலத்த மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இப்பகுதியில் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதியில் காற்றின் வேகம் 70 தொக்கம் 80 கிலோமீற்றர் வரையில் திடீரென அதிகரிப்பதுடன், இச்சந்தர்ப்பத்தில் பலத்த மழைவீழ்ச்சி, அல்லைது இடியுடன்கூடிய மழைவிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. மேற்படி கடற்பரபப்புக்களின் கடற்படை மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.