பொத்துவில் பிரதேசத்திற்கான தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு காணி அடையாளம்

(தாரிக் ஹஸன்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மேற்கொண்ட முயற்சியின் பலனாக பொத்துவில் பிரதேசத்திற்கான தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு காணி அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசத்திற்கான தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக பத்து (10) ஏக்கர் காணி பொத்துவில் – 05 கிராம சேவகர் பிரிவில், பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொத்துவில் பிரதேச செயலாளர் அவர்களினால் ஒதுக்கீடு செய்து தரப்பட்டுள்ளது.

இத் தாவரவியல் பூங்காவிற்கான பெயர்ப்பலகை கடந்த செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அவர்களினால் நடப்பட்டு குறித்த நிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.