தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெற்ற கபடி சம்பியன்சிப் போட்டியில் வெற்றி

( றம்ஸீன் முஹம்மட் )

தேசிய ரீதியில் கொழும்பில் இடம்பெற்ற கபடி சம்பியன்சிப் போட்டியில் வெற்றியீட்டி அம்பாறை மாவட்டத்திற்கும் நிந்தவுர் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த நிந்தவுர் மதீனா விளையாட்டுக்கழக வீர்ர்களை முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான றிஸாத் பதியுதீன் தனது இல்லத்திற்கு அழைத்து பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலிருந்தும் பல கழகங்கள் இச்சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட போதிலும் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகமொன்று வெற்றி கொள்வதென்பது ஒரு இலகுவான காரியம் அல்ல , இருந்தும் திறமையை வெளிப்படுத்திய வீர்ர்களுக்கும் இவ்வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.