மட்டக்களப்பில் வாழ்வாதாரா உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பில் பெண்கள் பொருளாதார வலுவூட்டலுக்காக தேவையுடைய பயனாளிக்கு தையல் இயந்தரம் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் இயங்கி வரும் நியூ அரோ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் பெண்கள் பொருளாதார வலுவூட்டல் செயற்றிட்டத்தின்கீழ் தேவையுடைய பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் ஜெயந்திபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான தையல் இயந்திரம் ஒன்றினை அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் இன்று வழங்கி வைத்தார்.

இவ்வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் நியூ அரோ பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் திருமதி. உறுத்திராதேவி ரவி, மற்றும் அதன் திட்ட உத்தியோகத்தர்களான லதாமோகனராஜ், ரதிகா ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.